வணக்கம்.
இலங்கையில் ஊடக தர்மத்தை பேணும் வகையிலும் நம்பகமான, பக்கசார்பற்ற செய்திகளை வழங்கும் நோக்கிலும் சர்வதேச தரத்திலான இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது.
உண்மையில் தற்போதைய காலகட்டத்தில் புலனாய்வும் தேடலும் குறைவாகவே காணப்படுகிறது. தமிழ் பரப்பில் அதற்கான தேவை அதிகரித்து வரும் நிலையில் அவை குறித்து இளம் பராயத்தினர் அக்கறைகொள்ளாமை வருந்தத்தக்கது.
அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் தரமான தகவல்களை வாசகர்களுக்கு கொண்டு செல்லும் வகையில் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கும் களமாகவும் இந்த இணையத்தளம் இயங்கவுள்ளது.
அனுபவம் மிக்க ஊடகவியலாளர்களால் இந்த இணையத்தளம் நடத்தப்படவுள்ளதால் நேர்மையுடன் கூடிய நம்பகத்தன்மை பேணப்படும் என்பதில் ஐயமில்லை.
இது www.newsme.lk என்ற பெயரில் 21.11.2026 சனிக்கிழமை காலை 7.12 மணிக்கு அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது.
டிஜிட்டல் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வண்ணம் சர்வதேச தரத்தில் இணையத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமல்லாது அவர்களை விழிப்புணர்வடையச் செய்வது ஊடகத்தின் முக்கியமான பங்காகும். அதேபோல அரச இயந்திரத்தின் செயற்பாடுகளை அவதானித்து தேவையான நேரத்தில் பொருத்தமான பரிந்துரைகளை முன்வைக்க வேண்டியதும் பிரதான பணிகளில் ஒன்றாகும்.
இவற்றை முன்னிறுத்தி ஊடக தர்மத்துடன் நேர்த்தியான, காத்திரமான செய்தி ஊடகவியலை முன்னெடுப்பதற்கு NEWSME இணையத்தளம் தயாராக உள்ளது.
இந்த மகிழ்ச்சியான தருணத்தில் பங்கேற்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
-இவ்வண்ணம்,
ஆசிரிய பீடம்
www.newsme.lk

