குவைட் மீது ஈரான் இன்று (நவ.26) ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் இரண்டு இத்தாலி பிரஜைகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேசஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குவைட்டிலுள்ள ஜேர்மன் நிறுவனத்தில் கடமையாற்றிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதலில் இத்தாலி பிரஜைகள் இருவர், பாகிஸ்தான், மற்றும் குவைட் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நால்வர் காயமடைந்துள்ளதாக குவைட் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தமது வான் பரப்புக்குள் சட்டவிரோதமாக சில ட்ரோன்கள் பிரவேசித்துள்ளதாகவும், அவற்றை தமது பாதுகாப்பு அதிகாரிகள் சூட்டு வீழ்த்தியதாகவும்அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த தாக்குதலை அடுத்து குவைட் வான் பரப்பு பாதுகாப்புக்காக மூடப்பட்டுள்ளது.
இதனால், குவைட்டுக்கான பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. (NewsMe)



















