நாட்டு மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை முன்கூட்டியே நீக்கத் தவறும் இணைய நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் சட்டத்தை அவுஸ்திரேலியா அமுல்படுத்தியுள்ளது.
அச்சட்டத்திற்கு இணங்க மறுக்கும் நிறுவனத்திற்கு அதன் உலகளாவிய வருமானத்தில் ஐந்து வீதம் வரை அல்லது 72 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்படும்.
ஓராண்டில் நடப்பிற்கு வரும் இணையவழிப் பாதுகாப்புக் கடமைச் சட்டமானது மக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதை உறுதிசெய்யும் என அந்நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது.
இதற்கு முன்னர் 16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடையை அவுஸ்திரேலியா விதித்தது. செய்தி உள்ளடக்கங்களுக்குக் கட்டணம் வசூலிக்கவும் திட்டமிட்டுள்ளது.
‘தொழில்நுட்ப பெருநிறுவனங்கள் இனியும் மாயையில் இருக்க முடியாது; மக்களைப் பாதுகாப்பது அவற்றின் பொறுப்பு,’ என அந்நாட்டுத் தொடர்பாடல் துறை அமைச்சர் அனிகா வெல்ஸ் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அவுஸ்திரேலியாவின் இந்த சடடமானது கருத்து சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். (NewsMe)



















