• எம்மைப்பற்றி
  • விளம்பரம்
  • தொடர்பு
NewsMe Sri Lanka
Advertisement
  • முகப்பு
  • உள்நாடு
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • கட்டுரை
  • அரசியல் மறுபக்கம்
  • இப்படியும் நடக்கிறது
  • நமது சினிமா
  • உங்கள் பங்களிப்பு
  • BIZ
No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாடு
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • கட்டுரை
  • அரசியல் மறுபக்கம்
  • இப்படியும் நடக்கிறது
  • நமது சினிமா
  • உங்கள் பங்களிப்பு
  • BIZ
No Result
View All Result
NewsMe Sri Lanka
No Result
View All Result
Home BIZ

இலங்கைக்குள் ஜப்பானிய சுகாதாரப் பரிசோதனை மையமான NURAவை அறிமுகப்படுத்தும் Hayleys

by Ranjan Arun Prasadh
November 22, 2026
in BIZ
இலங்கைக்குள் ஜப்பானிய சுகாதாரப் பரிசோதனை மையமான NURAவை அறிமுகப்படுத்தும் Hayleys
277
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜப்பானை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய சுகாதாரப் பரிசோதனை மையங்களின் சர்வதேச வலையமைப்பான NURA, Hayleys குழுமத்துடன் இணைந்து இலங்கையில் தனது சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளது.

FUJIFILM DKH LLC நிறுவனத்தினால் இயக்கப்படும் NURA, Hayleys குழுமத்தின் துணை நிறுவனமான Innovative Health Solutions (Pvt) Ltd உடன் மேற்கொண்டுள்ள மூலோபாயக் கூட்டாண்மையின் ஊடாக இலங்கைக்குள் நுழையவுள்ளது.

NURA மையத்தில் மேற்கொள்ளப்படும் முழுமையான சுகாதாரப் பரிசோதனைக்கு பொதுவாக சுமார் 120 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும். இதற்காக முன்கூட்டியே உணவு தவிர்ப்பதோ அல்லது மருத்துவரின் பரிந்துரையைப் பெறுவதோ அவசியமில்லை.

வாழ்க்கை முறை தொடர்பான முக்கிய நோய்கள் மற்றும் பொதுவான புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதை நோக்கமாகக் கொண்டு பல்வேறு ஸ்கேன் மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட மருத்துவர் ஆலோசனை வழங்கப்படுவதுடன், பரிசோதனை அறிக்கையும் அன்றைய தினமே வழங்கப்படும். இதன் மூலம் ஒரே வருகையில் முழுமையான சுகாதாரப் பரிசோதனையை நிறைவு செய்ய முடியும்.

இந்தப் பரிசோதனைகளில் Fujifilm நிறுவனத்தின் சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஜப்பானிய இமேஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது.

குறிப்பாக, வழக்கமான சிடி (CT) ஸ்கேன்களுடன் ஒப்பிடுகையில் 97 சதவீதம் வரை குறைந்த கதிர்வீச்சைப் பயன்படுத்தும் Ultra-low-dose CT தொழில்நுட்பமும் இதில் உள்ளடங்குகிறது. அத்துடன், AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் படங்களின் தரம் மேம்படுத்தப்பட்டு மருத்துவர்களுக்கு நோயறிதல் மற்றும் மருத்துவத் தீர்மானங்களை மேற்கொள்ள உதவுகிறது.

இலங்கையில் NURA சேவையை அறிமுகப்படுத்துவது தொடர்பாக அதன் நிறுவனர் மற்றும் பணிப்பாளரான மசஹாரு மொரிட்டா (Masaharu Morita) கருத்துத் தெரிவிக்கையில்,

ஜப்பானில் வழக்கமான சுகாதாரப் பரிசோதனைகள் மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக உள்ளதாகவும், நோய் ஏற்படுவதற்கு முன்னரே மக்கள் பரிசோதனைகளை மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தக் கலாசாரத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்வதே NURA நிறுவனத்தின் நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இந்தியா, மங்கோலியா, வியட்நாம், தாய்லாந்து மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் ஏற்கனவே தமது பரிசோதனை மையங்கள் இயங்கி வருவதாகவும் அடுத்ததாக இலங்கைக்கு வருவதில் பெருமையடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், AI தொழில்நுட்பம் மருத்துவர்களுக்கு உதவுவதுடன், குறைந்த கதிர்வீச்சைப் பயன்படுத்தும் CT ஸ்கேன் தொழில்நுட்பத்தின் ஊடாக வருடாந்த சுகாதாரப் பரிசோதனைகளை எளிதாக்குவதே தமது நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

NURA மையம் திறக்கப்படுவதற்கு முன்னதாக மேலதிக தகவல்களையும் அறிவிப்புகளையும் பெற்றுக்கொள்ள விரும்புவோர் www.nurahealth.lk/waitlist என்ற இணையத்தளத்தில் காத்திருப்புப் பட்டியலில் பதிவு செய்துகொள்ள முடியும்.

FUJIFILM Corporation மற்றும் Dr. Kutty’s Healthcare (DKH) ஆகியவற்றின் கூட்டிணைவில் உருவாக்கப்பட்ட NURA, FUJIFILM DKH LLC நிறுவனத்தின் கீழ் இயங்குகிறது. 2021ஆம் ஆண்டு இந்தியாவின் பெங்களூருவில் தனது முதலாவது மையத்தை ஆரம்பித்த இந்நிறுவனம், தற்போது பல்வேறு நாடுகளுக்கு தனது சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது.

Hayleys குழுமத்தின் துணை நிறுவனமான Innovative Health Solutions, நவீன மருத்துவத் தொழில்நுட்பங்கள் மற்றும் தடுப்பு சுகாதாரப் பரிசோதனைத் தீர்வுகளை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் நாட்டின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(NewsMe)

எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்!
Tags: FUJIFILMFUJIFILM CorporationFUJIFILM DKH LLCHayleysHealthInnovative Health Solutions (Pvt) LtdMedical checkNURASir Lanka
Previous Post

2026ன் இதுவரையான நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 2400ஐ தாண்டி உயிரிழப்புக்கள்

Next Post

இலங்கை, தாய்லாந்து நாடுகளுக்கு இடையில் விசா இனி இல்லை l உடன்படிக்கை கைச்சாத்து

Related Posts

இலங்கையில் இன்றைய தங்கத்தின் விலை விபரம்

இலங்கையில் இன்றைய தங்கத்தின் விலை விபரம்

November 26, 2026

இலங்கையில் இன்றைய தினம் (நவ.26) தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது இதன்படி, 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 343,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதுடன்,...

சிறப்புத் தேவையுடையோருக்கான BEmpowered தொழில்சந்தை

சிறப்புத் தேவையுடையோருக்கான BEmpowered தொழில்சந்தை

November 26, 2026

BConnected நிறுவனத்தின் BEmpowered திட்டத்தின் கீழ், Solutions Ground (Pvt) Ltd. நிறுவனத்தின் ஒத்துழைப்புடனும் அனுசரணையுடனும், மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில் BEmpowered Disability-Inclusive Job Fair...

மரக்கறி விலை சடுதியாக அதிகரிப்பு

மரக்கறி விலை சடுதியாக அதிகரிப்பு

November 23, 2026

மரக்கறி வகைகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதை அடுத்து, மரக்கறி விற்பனையாளர்கள் மாத்திரமன்றி, நுகர்வோரும் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழையுடனான வானிலையை...

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

November 23, 2026

இலங்கையில் இன்றைய (நவ.23) காலை நேர நிலவரத்தின் பிரகாரம் தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளதாக செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, கடந்த 21ம் திகதியுடன் ஒப்பிடுகையில்,...

Next Post
இலங்கை, தாய்லாந்து நாடுகளுக்கு இடையில் விசா இனி இல்லை l உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை, தாய்லாந்து நாடுகளுக்கு இடையில் விசா இனி இல்லை l உடன்படிக்கை கைச்சாத்து

  • Trending
  • Comments
  • Latest
வீதியையே கண்டிராத கண்டியிலுள்ள தமிழர் பகுதி – எதிர்காலம் கேள்விக்குறியில்

வீதியையே கண்டிராத கண்டியிலுள்ள தமிழர் பகுதி – எதிர்காலம் கேள்விக்குறியில்

November 25, 2026
BREAKING NEWS :- இலங்கைக்கு சுனாமி இல்லை

BREAKING NEWS :- இலங்கைக்கு சுனாமி இல்லை

November 24, 2026
நடிகை பிரியா பவானி சங்கர் திருமண நிச்சயம்?

நடிகை பிரியா பவானி சங்கர் திருமண நிச்சயம்?

November 19, 2026
JUST IN :- கொழும்பிலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் தீ

JUST IN :- கொழும்பிலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் தீ

November 23, 2026
மஹிந்தவின் ஒரு புதல்வர் FCID முன்னிலையில் l மற்றைய புதல்வர் நீதிமன்றில் முன்னிலையில்

மஹிந்தவின் ஒரு புதல்வர் FCID முன்னிலையில் l மற்றைய புதல்வர் நீதிமன்றில் முன்னிலையில்

இலங்கையின் பல பகுதிகளில் கூட்டம் கூட்டமாகப் பறக்கும் மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகள்! என்ன காரணம்?

இலங்கையின் பல பகுதிகளில் கூட்டம் கூட்டமாகப் பறக்கும் மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகள்! என்ன காரணம்?

கொழும்பு மேயருக்கும் வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளருக்கிடையில் கருத்து மோதல்

கொழும்பு மேயருக்கும் வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளருக்கிடையில் கருத்து மோதல்

ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் போக்குவரத்து தடை!

ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் போக்குவரத்து தடை!

கூச்சலிட்டால் அரசாங்கத்திடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி

கூச்சலிட்டால் அரசாங்கத்திடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி

November 26, 2026
குவைட் மீது ட்ரோன் தாக்குதல் l இருவர் உயிரிழப்பு

குவைட் மீது ட்ரோன் தாக்குதல் l இருவர் உயிரிழப்பு

November 26, 2026
கண்டியிலிருந்து 250 வருடங்களுக்கு முன்னர் ஒல்லாந்தர்கள் கொண்டு சென்ற துப்பாக்கிகள் மீண்டும் இலங்கைக்கு

கண்டியிலிருந்து 250 வருடங்களுக்கு முன்னர் ஒல்லாந்தர்கள் கொண்டு சென்ற துப்பாக்கிகள் மீண்டும் இலங்கைக்கு

November 26, 2026
இலங்கையை அண்மித்து உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் l கடும் எச்சரிக்கை விடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்

இலங்கையை அண்மித்து உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் l கடும் எச்சரிக்கை விடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்

November 26, 2026

சமீபத்திய செய்திகள்

இலங்கை மற்றும் உலகின் முக்கிய செய்திகளை விரைவாகவும் நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் உங்கள் நம்பிக்கையான செய்தித் தளம்

Follow Us

செய்திப் பிரிவுகள்

  • BIZ
  • Uncategorized
  • அரசியல் மறுபக்கம்
  • இப்படியும் நடக்கிறது
  • உள்நாடு
  • கட்டுரை
  • நமது சினிமா
  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • விளையாட்டு
  • வெளிநாடு

சமீபத்திய செய்திகள்

கூச்சலிட்டால் அரசாங்கத்திடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி

கூச்சலிட்டால் அரசாங்கத்திடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி

November 26, 2026
குவைட் மீது ட்ரோன் தாக்குதல் l இருவர் உயிரிழப்பு

குவைட் மீது ட்ரோன் தாக்குதல் l இருவர் உயிரிழப்பு

November 26, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரம்
  • தொடர்பு

© 2026 NewsMe.lk. All rights reserved | Site by DIVENZA

Powered by CookieAdmin
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.