• எம்மைப்பற்றி
  • விளம்பரம்
  • தொடர்பு
NewsMe Sri Lanka
Advertisement
  • முகப்பு
  • உள்நாடு
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • கட்டுரை
  • அரசியல் மறுபக்கம்
  • இப்படியும் நடக்கிறது
  • நமது சினிமா
  • உங்கள் பங்களிப்பு
  • BIZ
No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாடு
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • கட்டுரை
  • அரசியல் மறுபக்கம்
  • இப்படியும் நடக்கிறது
  • நமது சினிமா
  • உங்கள் பங்களிப்பு
  • BIZ
No Result
View All Result
NewsMe Sri Lanka
No Result
View All Result
Home BIZ

சிறப்புத் தேவையுடையோருக்கான BEmpowered தொழில்சந்தை

by Nirshan Ramanujam
November 26, 2026
in BIZ
சிறப்புத் தேவையுடையோருக்கான BEmpowered தொழில்சந்தை
305
VIEWS
Share on FacebookShare on Twitter

BConnected நிறுவனத்தின் BEmpowered திட்டத்தின் கீழ், Solutions Ground (Pvt) Ltd. நிறுவனத்தின் ஒத்துழைப்புடனும் அனுசரணையுடனும், மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில் BEmpowered Disability-Inclusive Job Fair 2026 எனும் சிறப்பு வேலைவாய்ப்பு தொழில்சந்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட திறமையான வேலைவாய்ப்பு தேடுநர்களையும் தொழில் வழங்குநர்களையும் ஒரே தளத்தில் இணைத்து, அர்த்தமுள்ள வேலைவாய்ப்பு வாய்ப்புகளை உருவாக்குவதுடன், இலங்கையில் மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய ஆட்சேர்ப்பு நடைமுறைகளை முன்னெடுப்பதே இந்த வேலைவாய்ப்பு தொழில்சந்தையின் முக்கிய நோக்கமாகும்.

இந்த வேலைவாய்ப்பு தொழில்சந்தை  2026 டிசம்பர் 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை, காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை, கொழும்பு 08, Institute of Bankers of Sri Lanka (IBSL) நிறுவனத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வின் மூலம் நிறுவனங்களுக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட திறமையான மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் திறன்களை மதிப்பீடு செய்வதற்கும், வேலைவாய்ப்பு, பயிற்சிப் பணியிடங்கள், வேலை முயற்சிகள் (Work Trials) மற்றும் நிரந்தர வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகளை ஆராய்வதற்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்.

கடந்த ஆண்டு நடைபெற்ற வேலைவாய்ப்பு முயற்சியின் வெற்றியைத் தொடர்ந்து, 2026ஆம் ஆண்டுக்கான இந்த வேலைவாய்ப்பு தொழில்சந்தை, திறன் மேம்பாட்டுக்கும் அர்த்தமுள்ள வேலைவாய்ப்புக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் BConnected நிறுவனத்தின் தொடர்ச்சியான முயற்சியாக முன்னெடுக்கப்படுகிறது.

இந்த முயற்சி, BEmpowered எனும் விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாகும். மாற்றுத்திறனாளிகளின் திறன்களை மேம்படுத்துவதுடன், அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கும், தொழிலாளர் சந்தையை அணுகுவதற்கான வாய்ப்புகளை வலுப்படுத்துவதற்கும் இந்தத் திட்டம் செயல்பட்டு வருகிறது.

“ஒவ்வொருவருக்கும் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி, பணியிடத்தில் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதற்கான வாய்ப்பு கிடைக்க வேண்டும். எனினும், திறமையான மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பை அணுகும்போது தொடர்ந்து பல்வேறு தடைகளை எதிர்கொள்கின்றனர்.

BEmpowered திட்டத்தின் ஊடாக, தொழில் வழங்குநர்களையும் வேலைவாய்ப்பு தேடுநர்களையும் நேரடியாக இணைத்து, அவர்களின் திறமைகளை அடையாளம் கண்டு, அர்த்தமுள்ள தொழில் வாய்ப்புகளை ஆராய்வதற்கான நேரடி வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் இந்த நிலைமையை மாற்ற உதவ விரும்புகிறோம்.

அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சேர்ப்பு என்பது நிறுவன சமூகப் பொறுப்பு (CSR) தொடர்பான ஒரு விடயம் மாத்திரமல்ல. அது திறமைகளை அங்கீகரிப்பதும், ஒவ்வொருவருக்கும் கற்றுக்கொள்ளவும், வளர்ச்சியடையவும், தங்கள் திறன்களை முழுமையாக வெளிப்படுத்தவும் சமமான வாய்ப்பை உறுதி செய்வதுமாகும்.”

என BConnected நிறுவனத்தின் Managing Director Felicia Adhihetty தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய ஆட்சேர்ப்பு நடைமுறையை தொழில் வழங்குநர்களுக்கு எளிமையாகவும் நடைமுறைக்கு ஏற்ற வகையிலும் மாற்றுவதே இந்த நிகழ்வின் நோக்கமாகும்.

பங்கேற்கும் நிறுவனங்களுக்கு முன்தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்களுடன் நேரடியாக கலந்துரையாடவும், அவர்களின் திறன்களை மதிப்பீடு செய்யவும், கிடைக்கக்கூடிய பணியிடங்களுக்கு அவர்கள் பொருத்தமானவர்களா என்பதை ஆராயவும் வாய்ப்பு கிடைக்கும்.

மேலும், பயிற்சிப் பணியிடங்கள் (Internships), வேலை முயற்சிகள் (Work Trials) மற்றும் ஏனைய ஆட்சேர்ப்பு முறைகள் மூலம் மேலும் உள்ளடக்கிய பணியிடங்களை எவ்வாறு உருவாக்க முடியும் என்பதையும் தொழில் வழங்குநர்கள் ஆராய முடியும்.

Solutions Ground (Pvt) Ltd. என்பது தலைமைத்துவ மேம்பாடு, மூலோபாய ஆலோசனை மற்றும் நிறுவன மாற்றம் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்ற சர்வதேச அளவிலான சிறப்பு ஆலோசனை நிறுவனமாகும்.

BConnected நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதுடன், இந்த முயற்சிக்கும் Solutions Ground (Pvt) Ltd. அனுசரணை வழங்குகிறது.

திறமையான மாற்றுத்திறனாளிகளை தொழில் வழங்குநர்களுடன் இணைப்பதற்கும், மேலும் உள்ளடக்கிய பணியாளர்களைக் கொண்டிருப்பதன் பெறுமதியை நிறுவனங்கள் உணர்வதற்கும் Solutions Ground தனது பங்களிப்பை வழங்கி வருகிறது.

“உள்ளடக்கிய ஆட்சேர்ப்புக்கு இரு தரப்பினரிடமிருந்தும் முயற்சி தேவைப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு சரியான திறன்களையும் வாய்ப்புகளையும் பெற்றுக்கொள்வதற்கான அணுகல் அவசியமாக இருப்பதைப் போலவே, நிறுவனங்களும் தங்களுடைய ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மறுபரிசீலனை செய்யவும், நிலவும் முன்கருத்துகளுக்கு சவால் விடுக்கவும், திறமைகளை அணுகுவதற்கான தடைகளை அகற்றவும் தயாராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்களைத் தயார்படுத்துவதன் மூலம் மாத்திரம் உள்ளடக்கத்தை உருவாக்க முடியாது. தொழில் வழங்குநர்களும் வாய்ப்புகளை உருவாக்கி, தேவையான மாற்றங்களை மேற்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

இந்த முயற்சியின் மூலம், அந்த இணைப்பை மேலும் எளிதாக்குவதுடன், தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ளடக்கிய ஆட்சேர்ப்பின் பெறுமதியை எடுத்துக்காட்டவும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.”

என Solutions Ground (Pvt) Ltd. நிறுவனத்தின் Founder and CEO Lakshan Madurasinghe தெரிவித்தார்.

இந்த வேலைவாய்ப்பு தொழில்சந்தையில் பங்கேற்குமாறு நிறுவனங்களின் மனிதவள (HR) தலைவர்கள், ஆட்சேர்ப்பு மேலாளர்கள் மற்றும் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் (Diversity, Equity and Inclusion – DE&I) தொடர்பான பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேட்பாளர் குழுவுடன் நேரடியாக தொடர்புகொள்வதன் மூலம், நிறுவனங்கள் தங்களுடைய ஆட்சேர்ப்பு அணுகுமுறைகளை விரிவுபடுத்தவும், திறமையானவர்களை அடையாளம் காணவும், மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய ஆட்சேர்ப்பு நடைமுறைகளை வலுப்படுத்துவதற்கான நடைமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடியும்.

தொழில் வழங்குநர்களுக்கான பங்கேற்பு முற்றிலும் இலவசமாகும். எனினும், பங்கேற்பதற்கான இடங்கள் வரையறுக்கப்பட்டுள்ளதால், நிறுவனங்கள் முன்கூட்டியே பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

பதிவு செய்வதற்கான இறுதித் திகதி: 23 நவம்பர் 2026, திங்கட்கிழமை மாலை 5.00 மணி.

பதிவு செய்வதற்கான விண்ணப்பப் படிவம்

நிறுவனங்கள் பதிவு செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள பதிவு விண்ணப்பப் படிவத்தைப் பயன்படுத்தலாம்.

நிகழ்வு தொடர்பான விபரங்கள்

நிகழ்வு: BEmpowered Disability-Inclusive Job Fair 2026
திகதி: 4 டிசம்பர் 2026, வெள்ளிக்கிழமை
நேரம்: காலை 9.00 மணி – மாலை 4.00 மணி
இடம்: Institute of Bankers of Sri Lanka (IBSL)
முகவரி: 80A, Elvitigala Mawatha, Colombo 08

மேலதிக தகவல்களுக்கு

Dilini: 070 382 8519
Asiri: 072 154 0537 (NewsMe)

எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்!
Tags: BconnectedBusinessNewsme.lk
Previous Post

வீதி விபத்துகளில் எண்மர் உயிரிழப்பு

Next Post

HIV தொற்றுக்குள்ளாகும் 24 வயதுக்கு குறைந்த இளைஞர்கள் l இலங்கையில் அதிகரிக்கும் ஆபத்து

Related Posts

இலங்கையில் இன்றைய தங்கத்தின் விலை விபரம்

இலங்கையில் இன்றைய தங்கத்தின் விலை விபரம்

November 26, 2026

இலங்கையில் இன்றைய தினம் (நவ.26) தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது இதன்படி, 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 343,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதுடன்,...

மரக்கறி விலை சடுதியாக அதிகரிப்பு

மரக்கறி விலை சடுதியாக அதிகரிப்பு

November 23, 2026

மரக்கறி வகைகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதை அடுத்து, மரக்கறி விற்பனையாளர்கள் மாத்திரமன்றி, நுகர்வோரும் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழையுடனான வானிலையை...

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

November 23, 2026

இலங்கையில் இன்றைய (நவ.23) காலை நேர நிலவரத்தின் பிரகாரம் தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளதாக செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, கடந்த 21ம் திகதியுடன் ஒப்பிடுகையில்,...

இலங்கைக்குள் ஜப்பானிய சுகாதாரப் பரிசோதனை மையமான NURAவை அறிமுகப்படுத்தும் Hayleys

இலங்கைக்குள் ஜப்பானிய சுகாதாரப் பரிசோதனை மையமான NURAவை அறிமுகப்படுத்தும் Hayleys

November 22, 2026

ஜப்பானை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய சுகாதாரப் பரிசோதனை மையங்களின் சர்வதேச வலையமைப்பான NURA, Hayleys குழுமத்துடன் இணைந்து இலங்கையில் தனது சேவைகளை...

Next Post
HIV தொற்றுக்குள்ளாகும் 24 வயதுக்கு குறைந்த இளைஞர்கள் l இலங்கையில் அதிகரிக்கும் ஆபத்து

HIV தொற்றுக்குள்ளாகும் 24 வயதுக்கு குறைந்த இளைஞர்கள் l இலங்கையில் அதிகரிக்கும் ஆபத்து

  • Trending
  • Comments
  • Latest
வீதியையே கண்டிராத கண்டியிலுள்ள தமிழர் பகுதி – எதிர்காலம் கேள்விக்குறியில்

வீதியையே கண்டிராத கண்டியிலுள்ள தமிழர் பகுதி – எதிர்காலம் கேள்விக்குறியில்

November 25, 2026
BREAKING NEWS :- இலங்கைக்கு சுனாமி இல்லை

BREAKING NEWS :- இலங்கைக்கு சுனாமி இல்லை

November 24, 2026
நடிகை பிரியா பவானி சங்கர் திருமண நிச்சயம்?

நடிகை பிரியா பவானி சங்கர் திருமண நிச்சயம்?

November 19, 2026
JUST IN :- கொழும்பிலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் தீ

JUST IN :- கொழும்பிலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் தீ

November 23, 2026
மஹிந்தவின் ஒரு புதல்வர் FCID முன்னிலையில் l மற்றைய புதல்வர் நீதிமன்றில் முன்னிலையில்

மஹிந்தவின் ஒரு புதல்வர் FCID முன்னிலையில் l மற்றைய புதல்வர் நீதிமன்றில் முன்னிலையில்

இலங்கையின் பல பகுதிகளில் கூட்டம் கூட்டமாகப் பறக்கும் மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகள்! என்ன காரணம்?

இலங்கையின் பல பகுதிகளில் கூட்டம் கூட்டமாகப் பறக்கும் மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகள்! என்ன காரணம்?

கொழும்பு மேயருக்கும் வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளருக்கிடையில் கருத்து மோதல்

கொழும்பு மேயருக்கும் வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளருக்கிடையில் கருத்து மோதல்

ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் போக்குவரத்து தடை!

ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் போக்குவரத்து தடை!

கூச்சலிட்டால் அரசாங்கத்திடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி

கூச்சலிட்டால் அரசாங்கத்திடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி

November 26, 2026
குவைட் மீது ட்ரோன் தாக்குதல் l இருவர் உயிரிழப்பு

குவைட் மீது ட்ரோன் தாக்குதல் l இருவர் உயிரிழப்பு

November 26, 2026
கண்டியிலிருந்து 250 வருடங்களுக்கு முன்னர் ஒல்லாந்தர்கள் கொண்டு சென்ற துப்பாக்கிகள் மீண்டும் இலங்கைக்கு

கண்டியிலிருந்து 250 வருடங்களுக்கு முன்னர் ஒல்லாந்தர்கள் கொண்டு சென்ற துப்பாக்கிகள் மீண்டும் இலங்கைக்கு

November 26, 2026
இலங்கையை அண்மித்து உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் l கடும் எச்சரிக்கை விடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்

இலங்கையை அண்மித்து உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் l கடும் எச்சரிக்கை விடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்

November 26, 2026

சமீபத்திய செய்திகள்

இலங்கை மற்றும் உலகின் முக்கிய செய்திகளை விரைவாகவும் நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் உங்கள் நம்பிக்கையான செய்தித் தளம்

Follow Us

செய்திப் பிரிவுகள்

  • BIZ
  • Uncategorized
  • அரசியல் மறுபக்கம்
  • இப்படியும் நடக்கிறது
  • உள்நாடு
  • கட்டுரை
  • நமது சினிமா
  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • விளையாட்டு
  • வெளிநாடு

சமீபத்திய செய்திகள்

கூச்சலிட்டால் அரசாங்கத்திடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி

கூச்சலிட்டால் அரசாங்கத்திடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி

November 26, 2026
குவைட் மீது ட்ரோன் தாக்குதல் l இருவர் உயிரிழப்பு

குவைட் மீது ட்ரோன் தாக்குதல் l இருவர் உயிரிழப்பு

November 26, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரம்
  • தொடர்பு

© 2026 NewsMe.lk. All rights reserved | Site by DIVENZA

Powered by CookieAdmin
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.