இலங்கையில் இன்றைய தினம் (நவ.26) தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது
இதன்படி, 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 343,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதுடன், 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 315,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.
கடந்த ஒரு வார காலத்துடன் ஒப்பிடுகையில், தங்கத்தின் விலையின் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.
கடந்த 19ம் திகதி 352,000 ரூபாவாக காணப்பட்ட 24 கரட் தங்கத்தின் விலை, இன்றைய தினம் (நவ.26) 343,000 ரூபாவாக காணப்படுகின்றது.
அத்துடன், கடந்த 19ம் திகதி 323,800 ரூபாவாக காணப்பட்ட 22 கரட் தங்கத்தின் விலை, இன்றைய தினம் (நவ.26) 315,600 ரூபாவாக பதிவாகியுள்ளது. (NewsMe)


















