இலங்கையில் 20 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன நிலையில், பல கிலோமீற்றர் தொலைவிலிருந்து தற்போது உடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட கழிவகற்றும் பவுசர் ஒன்று தொடர்பில் ஹபராதுவ பிரதேச சபை கணக்காய்வு ஒன்றை நடாத்துவதற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளது.
சுனாமி உதவித் திட்டத்தின் கீழ் 2005ம் ஆண்டு ஹங்கேரி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இந்த கழிவகற்றும் பவுசர், 2006ம் ஆண்டு புதுப்பித்தல் நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு நீர்கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்ட 4 மில்லியன் ரூபா பெறுமதியான இந்த கழிவகற்றும் பவுசர், காணாமல் போன நிலையிலேயே, தற்போது இந்த விசாரணைகளை முன்னெடுப்பதற்காக கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த பவுசர்; கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பவுசர் தொடர்பில் ஆராய்வதற்காக சென்ற வேளையில், அந்த கழிவகற்றும் பவுசரின் கொள்கலன் உள்ளிட்ட பல்வேறு பாகங்கள் காணாமல் போயுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
2017ம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது இந்த பவுசர் சேதமான நிலையில், கைவிடப்பட்ட காணியொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த பவுசருக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பில் கண்டறிவதற்கான கணக்காய்வு விசாரணைகள் ஆரம்பிக்கவுள்ளதாக பிரதேச சபையின் தவிசாளர் தக்ஷிண ரவிநாத் தெரிவித்துள்ளார். (NewsMe)




















