• எம்மைப்பற்றி
  • விளம்பரம்
  • தொடர்பு
NewsMe Sri Lanka
Advertisement
  • முகப்பு
  • உள்நாடு
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • கட்டுரை
  • அரசியல் மறுபக்கம்
  • இப்படியும் நடக்கிறது
  • நமது சினிமா
  • உங்கள் பங்களிப்பு
  • BIZ
No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாடு
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • கட்டுரை
  • அரசியல் மறுபக்கம்
  • இப்படியும் நடக்கிறது
  • நமது சினிமா
  • உங்கள் பங்களிப்பு
  • BIZ
No Result
View All Result
NewsMe Sri Lanka
No Result
View All Result
Home உள்நாடு

இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் வீழ்ச்சியடையும் பாரம்பரிய தொழில்கள் – முழு விபரம் இணைப்பு

By NewsMe Editorial

by Ranjan Arun Prasadh
November 26, 2026
in உள்நாடு
இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் வீழ்ச்சியடையும் பாரம்பரிய தொழில்கள் – முழு விபரம் இணைப்பு
283
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை ஏற்றுமதி வருமானத்தில் வளர்ச்சியை கண்டுள்ள போதிலும், இலங்கையின் பாரம்பரிய ஏற்றுமதி பொருட்களின் ஊடான வருமானத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இலங்கை ஏற்றுமதி சபையினால் வெளியிடப்பட்ட கடந்த 10 மாத கால ஏற்றுமதி வருமானம் தொடர்பான அறிக்கையை ஆராய்ந்ததன் ஊடாக, NewsMe.lkக்கு இந்த விடயத்தை உறுதி செய்துக்கொள்ள முடிந்தது.

2025ம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் 14,412.03 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்ட ஏற்றுமதி வருமானமானது, 2026ம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் 15,281.57 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இந்த ஏற்றுமதி வருமான அதிகரிப்பானது, 6.03 சதவீத வளர்ச்சி என இலங்கை ஏற்றுமதி சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஏற்றுமதி பொருட்களின் ஊடான வருமானத்தை தனித்தனியே ஆராய்ந்து பார்ப்போமாக இருந்தால், இலங்கையின் பாரம்பரிய ஏற்றுமதி பொருட்களின் ஊடாக வருமானத்தில் வீழ்ச்சி கண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

குறிப்பாக துணி மற்றும் ஆடை ஏற்றுமதியானது, கடந்த ஆண்டின் முதல் 10 மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 5.50 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

2025ம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் 4,440.85 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை துணி மற்றும் ஆடை உற்பத்தி பொருட்கள் இலங்கைக்கு பெற்றுக்கொடுத்திருந்தாலும், 2026ம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் 4,196.56 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் மாத்திரமே கிடைத்துள்ளது,

அத்துடன், இலங்கைக்கு அடையாளம் கொடுத்த தேயிலை ஏற்றுமதி வருமானமும் வீழ்ச்சியை நோக்கி நகர்ந்துள்ளதை இலங்கை ஏற்றுமதி சபையின் அறிக்கையின் ஊடாக உறுதிப்படுத்த முடிகின்றது.

இதன்படி, 2025ம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் தேயிலை ஏற்றுமதியின் ஊடாக 1,289.59 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானம் கிடைத்திருந்த நிலையில், 2026ம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் அந்த வருமானமானது 6.77 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

2026ம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் தேயிலை ஏற்றுமதியின் ஊடாக இலங்கைக்கு 1,202.26 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் மாத்திரமே கிடைத்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி சபையின் தரவுகள் குறிப்பிடுகின்றன.

அத்துடன், இலங்கையின் உற்பத்திகளில் பெயர் பெற்ற மற்றுமொரு பொருளாக விளங்கும் இரத்திக்கல் ஏற்றுமதி வருமானமும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக அவதானிக்க முடிகின்றது.

இதன்படி, 2025ம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் இரத்தினக்கல் மற்றும் தங்காபரண உற்பத்திகளின் ஏற்றுமதி ஊடாக இலங்கைக்கு 62.14 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக கிடைத்திருந்த நிலையில், 2026ம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் இரத்தினக்கல் மற்றும் தங்காபரண உற்பத்திகளின் ஏற்றுமதி ஊடாக 61.05 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் மாத்திரமே கிடைத்துள்ளது.

இந்த வருமானமானது, 2025ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.75 சதவீத வீழ்ச்சியாக அவதானிக்கப்படுகின்றது.

மரக்கறி ஏமரக்கறி ற்றுமதி வருமானமானது, 2025ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 15.68 சதவீத வீழ்ச்சியும், பழங்களின் ஊடாக ஏற்றுமதி வருமானமானது, கடந்த ஆண்டின் முதல் 10 மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் 19.96 சதவீத வீழ்ச்சியும் கண்டுள்ளது.

ஏனைய பயிர்களின் ஏற்றுமதி வருமானமானது, கடந்த ஆண்டின் முதல் 10 மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் 27.53 சதவீத வீழ்ச்சியை அடைந்துள்ளது.

அலங்கார மீன்களின் ஏற்றுமதி வருமானமானது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் 20.49 சதவீத வீழ்ச்சியடைந்துள்ளது.

பூக்களின் ஏற்றுமதி வருமானது 18.31 சதவீத வீழ்ச்சியும், படகு தயாரிப்பின் ஊடான ஏற்றுமதி வருமானமானது 38.58 சதவீத வீழ்ச்சியும் அடைந்துள்ளது.

கட்டிட நிர்மாணத்துறையும் முதல் 10 மாதங்களில் 31.97 சதவீத வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி சபை தெரிவிக்கின்றது.

இலங்கை ஏற்றுமதி வருமானத்தில் வளர்ச்சி கண்ட துறைகள்

இலங்கை ஏற்றுமதித்துறையின் வருமானமானது, நவீன தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சி அடைந்து வருவதாக இலங்கை ஏற்றுமதி சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் ஊடாக உறுதிப்படுத்தப்படுகின்றது.

இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் இலத்திரனியல் பொருட்களின் ஏற்றுமதியும், பெட்ரோலியம் சார்ந்த உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

குறிப்பாக இலத்திரனியல் சார் பொருட்களின் ஏற்றுமதி ஊடான ஏற்றுமதி வருமானமானது, 2025ம் ஆண்டின் முதல் 10 மாதங்களுடன் ஒப்பிடுகையில், 2026ம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் 59.50 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.

இலத்திரனியல் பொருட்களின் ஏற்றுமதியுடாக கடந்த ஆண்டு 354.73 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்திருந்த நிலையில், இந்த ஆண்டில் 566.14 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளது.

அத்துடன், பெட்ரோலியம் சார் உற்பத்தி பொருட்களின் ஊடான வருமானமானது, கடந்த ஆண்டின் முதல் 10 மாதங்களுடன் ஒப்பிடுக்கையில், இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் 56.51 சதவீத வளர்ச்சியாக காணப்படுகின்றது.

போக்குவரத்துத்துறை, நிதித்துறை, தொழில்நுட்பத்துறை உள்ளிட்ட சில துறைகளின் வளர்ச்சியானது, கடந்த ஆண்டின் முதல் 10 மாதங்களுடன் ஒப்பிடுகையில் வளர்ச்சியடைந்து வருவதை இலங்கை ஏற்றுமதி சபையின் அறிக்கையின் ஊடாக அவதானிக்க முடிந்தது.

எனினும், இலங்கையின் பாரம்பரிய அடையாளமாக விளங்கிய தேயிலை, ஆடை, இரத்தினக்கல் உள்ளிட்ட முக்கியத்துறைகள் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகின்றமை கவலையளிக்கும் விடயமாகும். (NewsMe)

எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்!
Tags: அமெரிக்க டொலர்இரத்தினக்கல்இலங்கைஇலத்திரனியல்கட்டிட நிர்மாணத்துறைதேயிலைதொழில்நுட்பத்துறைநிதித்துறைபெட்ரோலியம்போக்குவரத்துத்துறைமரக்கறி
Previous Post

”நாமல் அண்ணன், இருந்ததை விடவும் முதிர்ச்சி பெற்று வருவார்”

Next Post

இஸ்ரேலில் பாலஸ்தீனர்கள் கடும் சித்திரவதை!

Related Posts

கண்டியிலிருந்து 250 வருடங்களுக்கு முன்னர் ஒல்லாந்தர்கள் கொண்டு சென்ற துப்பாக்கிகள் மீண்டும் இலங்கைக்கு

கண்டியிலிருந்து 250 வருடங்களுக்கு முன்னர் ஒல்லாந்தர்கள் கொண்டு சென்ற துப்பாக்கிகள் மீண்டும் இலங்கைக்கு

November 26, 2026

ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கண்டி இராஜ்ஜியத்திலிருந்து கொண்டு சென்ற இலங்கைக்கே சொந்தமான பாரிய துப்பாக்கி (Rampartguns) என அடையாளப்படுத்தப்பட்ட இரண்டு துப்பாக்கிகளை மீண்டும் இலங்கையிடம் ஒப்படைக்க நெதர்லாந்து...

இலங்கையை அண்மித்து உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் l கடும் எச்சரிக்கை விடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்

இலங்கையை அண்மித்து உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் l கடும் எச்சரிக்கை விடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்

November 26, 2026

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் எதிர்வரும் நவம்பர் 29ஆம் திகதியளவில் வளிமண்டலத்தில் கீழ்மட்ட காற்றழுத்தத் தளம்பல் நிலை ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல்...

ஆசிரியர்கள், அதிபர்களினால் மாணவர்களின் பரீட்சை நடக்காத நிலைமை

ஆசிரியர்கள், அதிபர்களினால் மாணவர்களின் பரீட்சை நடக்காத நிலைமை

November 26, 2026

நாடு முழுவதும் உள்ள அதிபர்கள் - ஆசிரியர்கள் எதிர்வரும் 30ம் திகதி முன்னெடுக்கவுள்ள சுகயீன விடுமுறை தொழில்சங்க நடவடிக்கை காரணமாக பாடசாலைகளில் நடைபெறுகின்ற தவணை பரீட்சைகளுக்கு பாதிப்பு...

”நாமல் அண்ணன், இருந்ததை விடவும் முதிர்ச்சி பெற்று வருவார்”

”நாமல் அண்ணன், இருந்ததை விடவும் முதிர்ச்சி பெற்று வருவார்”

November 26, 2026

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ இருந்ததை விடவும், முதிர்ச்சியடைந்து சிறையிலிருந்து வெளியில் வருவார் என அவரது சகோதரர் ரோஹித்த ராஜபக்ஸ...

மஹிந்தவின் ஒரு புதல்வர் FCID முன்னிலையில் l மற்றைய புதல்வர் நீதிமன்றில் முன்னிலையில்

மஹிந்தவின் ஒரு புதல்வர் FCID முன்னிலையில் l மற்றைய புதல்வர் நீதிமன்றில் முன்னிலையில்

November 26, 2026

பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவிற்கு (FCID) அழைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் ரோஹித்த ராஜபக்ஸ, நான்கு மணிநேர விசாரணையின் பின்னர், அங்கிருந்து வெளியேறியுள்ளார்....

பொலிஸ் வலையில் சிக்கினார் கான்ஸ்டபிள்

பொலிஸ் வலையில் சிக்கினார் கான்ஸ்டபிள்

November 26, 2026

சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு பல நாட்களாக தேடப்பட்டு வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் டுபாயிலிருந்து இன்று நாடு கடத்தப்பட்டார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு அழைத்துவரப்பட்ட சந்தேக...

Next Post
இஸ்ரேலில் பாலஸ்தீனர்கள் கடும் சித்திரவதை!

இஸ்ரேலில் பாலஸ்தீனர்கள் கடும் சித்திரவதை!

  • Trending
  • Comments
  • Latest
வீதியையே கண்டிராத கண்டியிலுள்ள தமிழர் பகுதி – எதிர்காலம் கேள்விக்குறியில்

வீதியையே கண்டிராத கண்டியிலுள்ள தமிழர் பகுதி – எதிர்காலம் கேள்விக்குறியில்

November 25, 2026
BREAKING NEWS :- இலங்கைக்கு சுனாமி இல்லை

BREAKING NEWS :- இலங்கைக்கு சுனாமி இல்லை

November 24, 2026
நடிகை பிரியா பவானி சங்கர் திருமண நிச்சயம்?

நடிகை பிரியா பவானி சங்கர் திருமண நிச்சயம்?

November 19, 2026
JUST IN :- கொழும்பிலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் தீ

JUST IN :- கொழும்பிலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் தீ

November 23, 2026
மஹிந்தவின் ஒரு புதல்வர் FCID முன்னிலையில் l மற்றைய புதல்வர் நீதிமன்றில் முன்னிலையில்

மஹிந்தவின் ஒரு புதல்வர் FCID முன்னிலையில் l மற்றைய புதல்வர் நீதிமன்றில் முன்னிலையில்

இலங்கையின் பல பகுதிகளில் கூட்டம் கூட்டமாகப் பறக்கும் மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகள்! என்ன காரணம்?

இலங்கையின் பல பகுதிகளில் கூட்டம் கூட்டமாகப் பறக்கும் மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகள்! என்ன காரணம்?

கொழும்பு மேயருக்கும் வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளருக்கிடையில் கருத்து மோதல்

கொழும்பு மேயருக்கும் வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளருக்கிடையில் கருத்து மோதல்

ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் போக்குவரத்து தடை!

ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் போக்குவரத்து தடை!

குவைட் மீது ட்ரோன் தாக்குதல் l இருவர் உயிரிழப்பு

குவைட் மீது ட்ரோன் தாக்குதல் l இருவர் உயிரிழப்பு

November 26, 2026
கண்டியிலிருந்து 250 வருடங்களுக்கு முன்னர் ஒல்லாந்தர்கள் கொண்டு சென்ற துப்பாக்கிகள் மீண்டும் இலங்கைக்கு

கண்டியிலிருந்து 250 வருடங்களுக்கு முன்னர் ஒல்லாந்தர்கள் கொண்டு சென்ற துப்பாக்கிகள் மீண்டும் இலங்கைக்கு

November 26, 2026
இலங்கையை அண்மித்து உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் l கடும் எச்சரிக்கை விடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்

இலங்கையை அண்மித்து உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் l கடும் எச்சரிக்கை விடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்

November 26, 2026
ஆசிரியர்கள், அதிபர்களினால் மாணவர்களின் பரீட்சை நடக்காத நிலைமை

ஆசிரியர்கள், அதிபர்களினால் மாணவர்களின் பரீட்சை நடக்காத நிலைமை

November 26, 2026

சமீபத்திய செய்திகள்

இலங்கை மற்றும் உலகின் முக்கிய செய்திகளை விரைவாகவும் நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் உங்கள் நம்பிக்கையான செய்தித் தளம்

Follow Us

செய்திப் பிரிவுகள்

  • BIZ
  • Uncategorized
  • அரசியல் மறுபக்கம்
  • இப்படியும் நடக்கிறது
  • உள்நாடு
  • கட்டுரை
  • நமது சினிமா
  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • விளையாட்டு
  • வெளிநாடு

சமீபத்திய செய்திகள்

குவைட் மீது ட்ரோன் தாக்குதல் l இருவர் உயிரிழப்பு

குவைட் மீது ட்ரோன் தாக்குதல் l இருவர் உயிரிழப்பு

November 26, 2026
கண்டியிலிருந்து 250 வருடங்களுக்கு முன்னர் ஒல்லாந்தர்கள் கொண்டு சென்ற துப்பாக்கிகள் மீண்டும் இலங்கைக்கு

கண்டியிலிருந்து 250 வருடங்களுக்கு முன்னர் ஒல்லாந்தர்கள் கொண்டு சென்ற துப்பாக்கிகள் மீண்டும் இலங்கைக்கு

November 26, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரம்
  • தொடர்பு

© 2026 NewsMe.lk. All rights reserved | Site by DIVENZA

Powered by CookieAdmin
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.