நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று (நவ.22) மாலை அல்லது இரவு வேளைகளில் கடும் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவ.22) பிற்பகல் வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
இதன்படி, அம்பாறை, இரத்தினபுரி, கண்டி, களுத்துறை, காலி, குருநாகல், கேகாலை, கொழும்பு, நுவரெலியா, பதுளை, மாத்தறை, மாத்தளை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழையுடனான வானிலையை எதிர்பார்க்க முடியும் என திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக திணைக்களம் குறிப்பிடுகின்றது.
இடியுடனான மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும் என திணைக்களம் தெரிவிக்கின்றது. (NewsMe)




















