கொழும்பு புறநகர் பகுதியான கல்கிஸ்ஸை பகுதியிலுள்ள கடலில் நீராடிக் கொண்டிருந்த இந்திய பிரஜையொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்த அனர்த்தம் நேற்றைய தினம் (நவ.22) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடலில் நீராடிக் கொண்டிருந்த தருணத்தில் குறித்த நபர் நீரில் மூழ்கியுள்ளதுடன், அவரை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர் மீட்டு களுபோவில வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவி;க்கின்றனர்.
சம்பவத்தில் 45 வயதான இந்திய பிரஜையொருவரே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (NewsMe)




















