கொழும்பு – கண்டி வீதியின் கடுகண்ணாவ பகுதி இன்று மூடப்படுகிறது.புனரமைப்பு நடவடிக்கை காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பஹல கடுகண்ணாவ பகுதி இன்றிரவு (நவ.23) 11 மணி முதல் நாளை (நவ.24) அதிகாலை 6 மணி வரை முழுமையாக மூடப்படவுள்ளது.
பஹல கடுகண்ணாவை பகுதியிலுள்ள ஆபத்தான கற்களை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துதல் மற்றும் வீதி புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
இந்த விடயம் தொடர்பில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் தெளிவூட்டப்பட்டுள்ளதுடன், இடர் முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக அனைத்து தரப்பிற்கும் தகவல்கள் பகிரப்பட்டுள்ளன.
இந்த கால எல்லைக்குள் கொழும்பு – கண்டி பிரதான வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி, மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு இடர் முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. (NewsMe)



















