கொழும்பு துறைமுகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள எரிபொருள் களஞ்சியசாலையிலுள்ள கொள்கலன் தாங்கியில் ஏற்பட்ட எரிபொருள் கசிவு காரணமாக முகத்துவாரம் மற்றும் அந்த பகுதியை அண்மித்த சுமார் 3 கிலோமீற்றரும் அதிகமான கடல் பரப்பு அசுத்தமடைந்துள்ளதாக சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது.
கொழும்பு துறைமுக வளாகத்திலுள்ள …. இலக்கத்தை கொண்ட எரிபொருள் கொள்கலன் தாங்கியில் கடந்த 21ம் திகதி ஏற்பட்ட எரிபொருள் கசிவினால், நகர நீர் விநியோக கட்டமைப்பிலும் எரிபொருள் கலந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த எரிபொருள் முத்துவெல கரையோர பகுதிகளில் வெளியேறியுள்ளமையினால், கடல் அசுத்தமடைந்துள்ளதாக அதிகார சபை குறிப்பிடுகின்றது.
1000 டொன் கொள்ளளவை கொண்ட இந்த எரிபொருள் தாங்கியில், கசிவு ஏற்படும் தருணத்தில் முழுமையாக எரிபொருள் நிரப்பப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு கசிவு ஏற்பட்டுள்ள எரிபொருள் தாங்கியை விரைவில் வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். (NewsMe)




















