• எம்மைப்பற்றி
  • விளம்பரம்
  • தொடர்பு
NewsMe Sri Lanka
Advertisement
  • முகப்பு
  • உள்நாடு
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • கட்டுரை
  • அரசியல் மறுபக்கம்
  • இப்படியும் நடக்கிறது
  • நமது சினிமா
  • உங்கள் பங்களிப்பு
  • BIZ
No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாடு
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • கட்டுரை
  • அரசியல் மறுபக்கம்
  • இப்படியும் நடக்கிறது
  • நமது சினிமா
  • உங்கள் பங்களிப்பு
  • BIZ
No Result
View All Result
NewsMe Sri Lanka
No Result
View All Result
Home Uncategorized

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினை; ஜன.22 இல் இருதரப்புப் பேச்சு

by Nirshan Ramanujam
November 25, 2026
in Uncategorized
இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினை; ஜன.22 இல் இருதரப்புப் பேச்சு
271
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்திய – இலங்கை மீனவர்களுக்கு இடையில் நீண்டகாலமாகத் தொடர்ந்து வரும் பிரச்சினைகளுக்கு தீர்வொன்றைக் காணும் நோக்கில், இரு நாடுகளினதும் அதிகாரிகள் மட்டத்திலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் திகதி இந்தியாவின் புதுடில்லியில் நடைபெறவுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினை நீண்டகாலமாகத் தொடர்ந்துவரும் ஒரு விவகாரமாகும். இதற்கு நிரந்தரமானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான தீர்வொன்றை எட்டுவதில் எமது அரசாங்கம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. இதற்காக இராஜதந்திர மற்றும் அதிகாரிகள் மட்டங்களில் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஓர் அங்கமாக, எதிர்வரும் ஜனவரி 22ஆம் திகதி இலங்கை கடற்றொழில் அமைச்சின் செயலாளர் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் இந்தியாவுக்குச் சென்று, அந்நாட்டு கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட தொடர்புடைய உயர்மட்ட அதிகாரிகளுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.

இந்தியா – இலங்கை கடற்றொழில் தொடர்பான கூட்டுச் செயற்குழுவின் (Joint Working Group – JWG) கூட்டமாக நடைபெறவுள்ள இப்பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்றொழில் சார்ந்த முக்கிய பிரச்சினைகள் விரிவாக ஆராயப்படவுள்ளன.

குறிப்பாக, தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறிப் பிரவேசித்தல், தடைசெய்யப்பட்ட இழுவைமடி மீன்பிடி முறையைப் பயன்படுத்துதல், இதனால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கும் கடல் வளங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு, நிரந்தரத் தீர்வொன்றை எட்டுவதற்கான வழிமுறைகள் ஆராயப்படவுள்ளன.

இக்கூட்டத்தில் இலங்கை தரப்பிலிருந்து கடற்றொழில் அமைச்சு, கடற்றொழில் திணைக்களம், இலங்கை கடற்படை, இலங்கை பொலிஸ், கடலோரக் காவல்படை, தேசிய நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிலையம் (NARA), சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். இதன் மூலம் சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்களினதும் பங்களிப்புடன் பிரச்சினைகளை விரிவாக ஆராய்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கு முன்னதாக, 2024ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையில் நடைபெற்ற இந்திய – இலங்கை கடற்றொழில் கூட்டுச் செயற்குழுக் கூட்டத்தில் இந்தியத் தரப்பிலிருந்து கடற்றொழில் செயலாளர் தலைமையிலான குழுவினர், கடற்படைப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். அதன் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள இக்கூட்டம், இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்றொழில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.

மேலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் மற்றும் தமிழக அரச தரப்பினரும் இவ்விவகாரத்துக்கு நிரந்தரத் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார்கள் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம், கடல் வளங்களின் பாதுகாப்பு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, அனைத்து தரப்பினருடனும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து, இப்பிரச்சினைக்கு தீர்வொன்றை எட்டுவதற்கு எமது அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றார். (NewsMe)

எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்!
Tags: Fishermen Issue:indiaNewsme.lksri lanka
Previous Post

இன்று 100 மீல்லிமீற்றரை தாண்டி மழை – பிரதேசங்களில் விபரங்கள் இணைப்பு

Next Post

இந்திய – இலங்கை மீனவப் பிரச்சினை தொடர்பான அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தைக்கான திகதி அறிவிப்பு

Related Posts

இன்று 100 மீல்லிமீற்றரை தாண்டி மழை – பிரதேசங்களில் விபரங்கள் இணைப்பு

இன்று 100 மீல்லிமீற்றரை தாண்டி மழை – பிரதேசங்களில் விபரங்கள் இணைப்பு

November 25, 2026

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (நவ.25) மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி,...

Next Post
இந்திய – இலங்கை மீனவப் பிரச்சினை தொடர்பான அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தைக்கான திகதி அறிவிப்பு

இந்திய - இலங்கை மீனவப் பிரச்சினை தொடர்பான அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தைக்கான திகதி அறிவிப்பு

  • Trending
  • Comments
  • Latest
வீதியையே கண்டிராத கண்டியிலுள்ள தமிழர் பகுதி – எதிர்காலம் கேள்விக்குறியில்

வீதியையே கண்டிராத கண்டியிலுள்ள தமிழர் பகுதி – எதிர்காலம் கேள்விக்குறியில்

November 25, 2026
BREAKING NEWS :- இலங்கைக்கு சுனாமி இல்லை

BREAKING NEWS :- இலங்கைக்கு சுனாமி இல்லை

November 24, 2026
நடிகை பிரியா பவானி சங்கர் திருமண நிச்சயம்?

நடிகை பிரியா பவானி சங்கர் திருமண நிச்சயம்?

November 19, 2026
JUST IN :- கொழும்பிலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் தீ

JUST IN :- கொழும்பிலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் தீ

November 23, 2026
மஹிந்தவின் ஒரு புதல்வர் FCID முன்னிலையில் l மற்றைய புதல்வர் நீதிமன்றில் முன்னிலையில்

மஹிந்தவின் ஒரு புதல்வர் FCID முன்னிலையில் l மற்றைய புதல்வர் நீதிமன்றில் முன்னிலையில்

இலங்கையின் பல பகுதிகளில் கூட்டம் கூட்டமாகப் பறக்கும் மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகள்! என்ன காரணம்?

இலங்கையின் பல பகுதிகளில் கூட்டம் கூட்டமாகப் பறக்கும் மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகள்! என்ன காரணம்?

கொழும்பு மேயருக்கும் வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளருக்கிடையில் கருத்து மோதல்

கொழும்பு மேயருக்கும் வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளருக்கிடையில் கருத்து மோதல்

ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் போக்குவரத்து தடை!

ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் போக்குவரத்து தடை!

கூச்சலிட்டால் அரசாங்கத்திடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி

கூச்சலிட்டால் அரசாங்கத்திடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி

November 26, 2026
குவைட் மீது ட்ரோன் தாக்குதல் l இருவர் உயிரிழப்பு

குவைட் மீது ட்ரோன் தாக்குதல் l இருவர் உயிரிழப்பு

November 26, 2026
கண்டியிலிருந்து 250 வருடங்களுக்கு முன்னர் ஒல்லாந்தர்கள் கொண்டு சென்ற துப்பாக்கிகள் மீண்டும் இலங்கைக்கு

கண்டியிலிருந்து 250 வருடங்களுக்கு முன்னர் ஒல்லாந்தர்கள் கொண்டு சென்ற துப்பாக்கிகள் மீண்டும் இலங்கைக்கு

November 26, 2026
இலங்கையை அண்மித்து உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் l கடும் எச்சரிக்கை விடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்

இலங்கையை அண்மித்து உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் l கடும் எச்சரிக்கை விடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்

November 26, 2026

சமீபத்திய செய்திகள்

இலங்கை மற்றும் உலகின் முக்கிய செய்திகளை விரைவாகவும் நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் உங்கள் நம்பிக்கையான செய்தித் தளம்

Follow Us

செய்திப் பிரிவுகள்

  • BIZ
  • Uncategorized
  • அரசியல் மறுபக்கம்
  • இப்படியும் நடக்கிறது
  • உள்நாடு
  • கட்டுரை
  • நமது சினிமா
  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • விளையாட்டு
  • வெளிநாடு

சமீபத்திய செய்திகள்

கூச்சலிட்டால் அரசாங்கத்திடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி

கூச்சலிட்டால் அரசாங்கத்திடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி

November 26, 2026
குவைட் மீது ட்ரோன் தாக்குதல் l இருவர் உயிரிழப்பு

குவைட் மீது ட்ரோன் தாக்குதல் l இருவர் உயிரிழப்பு

November 26, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரம்
  • தொடர்பு

© 2026 NewsMe.lk. All rights reserved | Site by DIVENZA

Powered by CookieAdmin
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.