நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (நவ.25) மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக காற்று அதிகரித்து வீசக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிடுகின்றது.
காற்றின் வேகமானது 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என திணைக்களம் தெரிவிக்கின்றது.
(NewsMe)















