நாட்டின் சில பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அதன் பிரகாரம் மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடுமையான மின்னல் தாக்குவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, கடற்பகுதிகளில் இடியுடன் கூடிய மழையின்போது மணிக்கு 60-70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும், கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(NewsMe)




















