2026ம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் இலங்கையில் முழுமையான ஏற்றுமதி வருமானமானது, 15.28 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளது.
இலங்கை ஏற்றுமதி சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025ம் ஆண்டின் குறிப்பிட்ட இந்த காலப் பகுதியில் 14.41 பில்லியன் அமெரிக்க டொலராக ஏற்றுமதி வருமானம் காணப்பட்டது.
இதன்படி, ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையான காலத்தில் வர்த்தக பொருட்களின் ஏற்றுமதி 5.72 வீதமாக உயர்வடைந்துள்ளதுடன், அதன் ஊடாக 12.01 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் நாட்டிற்கு கிடைத்துள்ளது.
அத்துடன், சேவை ஏற்றுமதியின் ஊடாக 7.20 வீதமான வருமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதுடன், அதனுடாக 3.27 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளது.
(NewsMe)




















