இலங்கையில் நூற்றுக்கணக்கான உயிர்களை காவுக் கொண்ட திட்வா சூறாவளி தாக்கி ஒரு வருடம் நாளையுடன் (நவ.26) பூர்த்தியாகின்றது.
இந்த அனர்த்தம் ஏற்பட்டு ஒரு வருட தேசிய நினைவு தினம் பதுளை நகரை கேந்திரமாக கொண்டு நாளை (நவ. 25) மற்றும் நாளை மறுதினம் (நவ. 26) இடம்பெறவுள்ளது.
இதன்படி, சர்வமத அனுஷ்டான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஊவா மாகாண சபை, பதுளை மாவட்ட செயலகம் மற்றும் அரசியல் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஒன்றிணைந்து இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட திட்வா சூறாவளியானது, நாட்டின் 25 மாவட்டங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சூறாவளி காரணமாக 650திற்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்ததுடன், 170 திற்கும் அதிகமானோர் காணாமல் போயிருந்தனர்.
திட்வா காரணமாக 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருந்தனர். (NewsMe)




















