ரஷ்யாவின் மொஸ்கோ நகரிலிருந்து மத்தளை நோக்கி வருகைத் தந்த விமானத்தில் வெடி குண்டு இருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து, அந்த விமானம் முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, உஸ்பெகிஸ்தானிலிருந்து மத்தளைக்கு வருகை தந்த மற்றுமொரு விமானம் கட்டுநாயக்க நோக்கி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மொஸ்கோ நகரிலிருந்து மத்தளை நோக்கி வருகைத் தந்த Azur Air விமானத்திலேயே இவ்வாறு வெடி குண்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மத்தளை பொலிஸ் அதிகாரிகள் சோதனைகளை முன்னெடுத்துள்ளனர்.
எனினும், விமானத்தில் அவ்வாறான எந்தவொரு வெடிப் பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் NewsMe.lk க்கு உறுதிப்படுத்தினர். (NewsMe)




















