கண்டி மற்றும் அதனை அண்மித்த பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.
இன்று (நவ.25) மாலை முதல் பெய்த கடும் மழையுடனான வானிலை காரணமாகவே இவ்வாறு வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதன்படி, கண்டி நகரின் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், அக்குரனை நகரத்திலும் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளது.
பெனிதெனிய பகுதியும் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (NewsMe)




















