இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் இந்தியா இரண்டாவது பாரிய பங்களிப்பை செய்துள்ளது.
இதன்படி, கடந்த 10 மாதங்களில் இந்தியாவிற்கு செய்யப்பட்ட ஏற்றுமதியின் ஊடக 989.66 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளது.
அக்டோபர் மாதத்தில் மாத்திரம் 99.82 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு கிடைத்துள்ளது.
இந்த வருடத்தில் இந்தியாவிற்கு செய்யப்பட்ட ஏற்றுமதியின் ஊடக 1000 மில்லியன் அமெரிக்கா டொலர் வருமானம் இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை ஏற்றுமதி வருமானத்தில் முதலாவது பாரிய பங்களிப்பை செய்த நாடாக அமெரிக்கா விளங்குகின்றது.
இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தின் ஊடக அமெரிக்காவிடமிருந்து 2,518.31 மில்லியன் அமெரிக்கா டொலர் கடந்த 10 மாதங்களில் கிடைத்துள்ளது.
மூன்றாம் இடத்தில் பிரித்தானியா 723.40 மில்லியன் அமெரிக்கா டொலர் வருமானத்தை இலங்கைக்கு கடந்த 10 மாதங்களில் பெற்றுக் கொடுத்துள்ளது.
ஏற்றுமதியின் ஊடாக இலங்கைக்கு இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் மாத்திரம் 15,281.57 மில்லியன் அமெரிக்கா டொலர் வருமானமாக கிடைத்துள்ளது.
(NewsMe)




















