இந்து சமுத்திரத்தில் இன்று (நவ.21) ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவிக்கிறது.
இந்து சமுத்திரத்தின் Banda Aceh பகுதியை அண்மித்து, கடல் மட்டத்திலிருந்து சுமார் 156 கிலோமீற்றர் ஆழத்தில் இன்று பிற்பகல் 03.12 மணிக்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் 6.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
இலங்கைக்கு இந்த நிலநடுக்கத்தினால் எந்தவித பாதிப்பும் இல்லை என்பதனால், கரையோர பகுதிகளில் வாழும் மக்கள் யாரும் தேவையற்ற அச்சத்தை கொள்ள வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
(NewsMe)




















