நாட்டின் வடக்கு மாவட்டங்களில் காற்று துரிதமாக மாசடைந்து வருவதாக இலங்கை மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன் பிரகாரம் கடந்த 24 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் காற்று மாசடைவால் பாதிக்கப்பட்டுள்ளன.
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தேசிய காற்று தர வலையமைப்பின் தகவல்களின் பிரகாரம் குறித்த மாவட்டங்களில் காற்று மாசடைவு சுட்டெண் 200 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.
இது ஆரோக்கியமற்ற தன்மை ஆகும். இதனால் பொதுமக்களுக்கு கடுமையான உடல்நலப் பாதிப்பு ஏற்படக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. (NewsMe)




















