கொழும்பு புறக்கோட்டையில் ஹொரணை பேருந்து தரிப்பிடத்தில் அண்மையில் நடந்த சம்பவம் இது.
ஹொரணைக்கு செல்வதற்காக தயார் நிலையில் இருந்தது அந்த தனியார் பேருந்து. அடுத்தடுத்து பயணிகள் ஏறத் தொடங்கினர்.
இரண்டு ஆசனங்கள் மாத்திரம் மீதமிருக்கும் போது பேருந்தின் நடத்துநர் வந்து பயணிகளிடமிருந்து பயணக் கட்டணத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
இன்னும் 10 நிமிடங்களில் பேருந்து புறப்பட்டுவிடும் என்ற செய்தியை சொல்லிவிட்டு இறங்கிச் சென்றுள்ளார்.
இவ்வாறு கட்டணம் அறவிடப்பட்டு 10 நிமிடங்களில் மற்றுமொருவர் தான்தான் நடத்துநர் எனக் கூறிக்கொண்டு பேருந்தில் ஏறியுள்ளார்.
ஆஹா…என்ன நடக்கிறது எனத் தெரியாமல் விழி பிதுங்கி நின்றனர் பயணிகள்.
உண்மையில் முதலவதாக பேருந்தில் ஏறி கட்டணம் அறவிட்டவர் ஓர் ஏமாற்றுப் பேர்வழி. அவர் சூட்சுமமாக பயணிகளை ஏமாற்றி கொள்ளையடித்துச் சென்றுள்ளார் என்பது உண்மையான நடத்துநர் கூறித்தான் தெரியவந்துள்ளது.
கண் இருக்குற போதே காக்கை பிடுங்கிறது போல என்ற பழமொழி இதற்குப் பொருத்தமாக இருக்கிறது. (NewsMe)















