நாட்டில் மீண்டும் மலேரியா தொற்று பரவி வருவதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 2016 ஆம் ஆண்டு முதல் மலேரியா நோய் முற்றாக ஒழிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட போதிலும் இவ்வாண்டு இதுவரையான காலப்பகுதியில் 39 பேர் இந்த நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மலேரியாவை ஆரம்பத்திலேயே கண்டறியத் தவறினால் மேலும் பலர் பாதிப்படையக் கூடும் என சுகாதா அமைச்சின் மலேரியா தடுப்புப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் டாக்டர் புபுது சுலசிறி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பல மாவட்டங்களில் மலேரியாவை பரப்பும நுளம்புகள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகளாவிய ரீதியில் சுமார் 282 பேர் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஆண்டுதோறும் சுமார் ஆறு இலட்சம் பேர் உயிரிழக்கின்றமை குறிப்பிடத்தக்கது. (NewsMe)




















