ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ இருந்ததை விடவும், முதிர்ச்சியடைந்து சிறையிலிருந்து வெளியில் வருவார் என அவரது சகோதரர் ரோஹித்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவில் நாமல் ராஜபக்ஸஇன்றைய தினம் (நவ.26) முன்னிலையாகி, ‘SupremeSAT’ செய்மதி தொடர்பில் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
நான்கு மணிநேரம் வாக்குமூலம் வழங்கியதை அடுத்து, அங்கிருந்து வெளியேறிய சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
”அண்ணன் தொடர்பில் சலிப்படைய மாட்டேன். அண்ணன் இருந்ததை விடவும் சிறந்த முறையில் முதிர்ச்சி அடைந்து வெளியில் வருவார். அண்ணன் தொடர்பில் எனக்கு மாத்திரமா எதிர்பார்ப்பு இருக்கின்றது. அண்ணனின் எதிர்கால எதிர்பார்ப்பு எனக்கு மாத்திரமா உள்ளது?” என ரோஹித்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும் :- மஹிந்தவின் ஒரு புதல்வர் FCID முன்னிலையில் l மற்றைய புதல்வர் நீதிமன்றில் முன்னிலையில் (NewsMe)




















