எந்தளவான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், அசாதாரண கோரிக்கைகளுக்கு இந்த சந்தர்ப்பத்தில் தீர்வை வழங்க முடியாது என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவிக்கிறார்.
கொழும்பில் இன்று (நவ.26) நடைபெற்ற “வரவு செலவுத்திட்டம் மற்றும் வேலை செய்யும் மக்கள்” எனும் தொணிப்பொருளின் கீழ் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டில் தற்போது நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்களுக்கு பின்னால் எதிர்கட்சிகளின் நடவடிக்கைகள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வளவு கூச்சலிட்டாலும் அரசாங்கத்திடமிருந்து எதையும் பெற்றுக் கொள்ள முடியாது என கூறிய ஜனாதிபதி, ஆர்ப்பாட்டம் செய்வதற்கு முன்னரே தொழிலாளர்களின் பிரச்சினைகளை அரசாங்கம் தீர்த்து வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். (NewsMe)



















