மதவாச்சி – அநுராதபுரம் பிரதான வீதியின் ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 50திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளதுடன், பின்னர் தனியார் பேருந்து ஒன்றும் குறித்த பேருந்துகளில் ஒன்றைய மோதியதில் பாரிய விபத்தொன்று சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த நபர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. (NewsMe)




















