நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மாலை வேளையில் கடும் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவ.21) காலை வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேல், சபரகமுவ, வடமேல், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரத்தில் கடும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என திணைக்களம் குறிப்பிடுகின்றது.
நாட்டின் சில பகுதிகளில் 75 மில்லிமீட்டருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாகவும் திணைக்களம் தெரிவிக்கின்றது.
அத்துடன், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடும் பனிமூட்டம் நிலவக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக கடும் காற்றுடனான வானிலை நிலவும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. (NewsMe)




















