இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த 2 தினங்களில் 10000 ரூபாவினால் குறைவடைந்துள்ளது.
இதன்படி, நேற்றைய தினம் (நவ. 20) 7000 ரூபாவினால் தங்கத்தின் விலை குறைந்திருந்ததுடன், இன்றைய தினம் (நவ. 21) 3000 ரூபாவினால் குறைவடைந்துள்ளது.
இலங்கையில் இன்றைய தினம் 22 கரட் தங்கத்தின் விலை 314,400 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
24 கரட் தங்கத்தின் விலை 342,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. (NewsMe)



















