உடன் அமுலுக்குவரும் வகையில் 06 பிரதி பொலிஸ் மாஅதிபர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவினால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, களுத்துறை மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர், கேகாலை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கேகாலை மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர், யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர், களுத்துறை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், மத்திய குற்ற விசாரணை பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர், பொலிஸ் நலன்புரி பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ள அதேவேளை, பொலிஸ் நலன்புரி பிரிவின் பிரதி பொலிஸ் மாஅதிபர், மத்திய குற்ற விசாரணை பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். (NewsMe)




















