• எம்மைப்பற்றி
  • விளம்பரம்
  • தொடர்பு
NewsMe Sri Lanka
Advertisement
  • முகப்பு
  • உள்நாடு
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • கட்டுரை
  • அரசியல் மறுபக்கம்
  • இப்படியும் நடக்கிறது
  • நமது சினிமா
  • உங்கள் பங்களிப்பு
  • BIZ
No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாடு
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • கட்டுரை
  • அரசியல் மறுபக்கம்
  • இப்படியும் நடக்கிறது
  • நமது சினிமா
  • உங்கள் பங்களிப்பு
  • BIZ
No Result
View All Result
NewsMe Sri Lanka
No Result
View All Result
Home வெளிநாடு

HONDA, TOYOTA வாகனங்களில் ஆபத்து – 16 இலட்சம் வாகனங்களை மீளப் பெற தீர்மானம் 

by Ranjan Arun Prasadh
November 23, 2026
in வெளிநாடு, உள்நாடு, முக்கிய செய்திகள்
HONDA, TOYOTA வாகனங்களில் ஆபத்து – 16 இலட்சம் வாகனங்களை மீளப் பெற தீர்மானம் 
295
VIEWS
Share on FacebookShare on Twitter

டகாடா (Takata) நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட குறைபாடுடைய ஏர்பேக் உதிரிப்பாகங்கள் வெடிப்பதன் மூலம் பாரிய காயங்கள் ஏற்படக்கூடும் என்ற அச்சம் காரணமாக, அமெரிக்காவில் சுமார் 16 இலட்சம் வாகனங்களை மீளப் பெறுவதாக ஜப்பானிய வாகன உற்பத்தி நிறுவனங்களான ஹோண்டா மற்றும் டொயோட்டா அறிவித்துள்ளன.

குறிப்பிட்ட சில கார்கள், SUV ரக வாகனங்கள் மற்றும் ட்ரக் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஏர்பேக் உதிரிப்பாகங்கள் செயலிழக்கும் அபாயம் தொடர்பில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை (நவ.20) இந்த மீளப்பெறல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏர்பேக் செயல்படும் சந்தர்ப்பத்தில் அதன் உட்புறத்தில் உள்ள காற்றுப்பை விரிவாக்கி (Airbag Inflator) வெடிக்கக்கூடும் என அமெரிக்காவின் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் (NHTSA) தெரிவித்துள்ளது.

இதன்போது கூர்மையான உலோகத் துண்டுகள் வாகனத்தின் உட்பகுதிக்குள் சிதறி, சாரதி மற்றும் பயணிகளுக்குப் பாரிய காயங்களை ஏற்படுத்தும் அபாயம் காணப்படுவதாகவும் அந்த நிர்வாகம் எச்சரித்துள்ளது.

இதற்கமைய, ஹோண்டா நிறுவனம் தனது ஹோண்டா மற்றும் அகுரா (Acura) ரகங்களைச் சேர்ந்த 810,592 வாகனங்களை மீளப் பெறுகிறது.

அதேவேளை, டொயோட்டா நிறுவனம் குறிப்பிட்ட சில டொயோட்டா மற்றும் லெக்ஸஸ் (Lexus) ரக வாகனங்களையும் மீளப் பெறுவதாக அறிவித்துள்ளது.

டகாடா ஏர்பேக் உதிரிப்பாகங்களில் பயன்படுத்தப்படும் இரசாயன உந்துசக்தி (Chemical Propellant), நீண்டகாலமாக அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதத்திற்கு உள்ளாகும்போது நிலையற்ற தன்மையை அடைந்து சிதைவடைவதே இந்தப் பாதுகாப்பு குறைபாட்டுக்குக் காரணமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த அண்மைய அறிவிப்புகள், டகாடா ஏர்பேக் தொடர்பில் நீண்டகாலமாக உலகளாவிய ரீதியில் நிலவி வரும் பாதுகாப்புப் பிரச்சினையின் ஒரு பகுதியாகும்.

கடந்த பத்தாண்டுகளில், அமெரிக்காவில் மாத்திரம் சுமார் 6.7 கோடி வாகனங்கள் உட்பட உலகளாவிய ரீதியில் 10 கோடிக்கும் அதிகமான வாகனங்கள் டகாடா ஏர்பேக் உதிரிப்பாகங்கள் தொடர்பான பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாக மீளப் பெறப்பட்டுள்ளன.

எனினும், இந்தப் புதிய மீளப்பெறல் நடவடிக்கைக்கு உட்பட்ட வாகனங்கள் தொடர்பில் இதுவரை எந்தவொரு விபத்தும், காயமும் அல்லது ஏர்பேக் வெடிப்புச் சம்பவமும் பதிவாகவில்லை என வாகன உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

குறைபாடுடைய உதிரிப்பாகங்களுக்குப் பதிலாக புதிய உதிரிப்பாகங்களைப் பொருத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.

ஹோண்டா நிறுவனம் மீளப் பெறும் வாகனங்களில் 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட சில அகோர்ட் (Accord), சிவிக் (Civic), CR-V, அகுரா ILX மற்றும் அகுரா RDX ஆகிய ரக வாகனங்கள் உள்ளடங்குகின்றன.

அதேபோன்று, டொயோட்டா நிறுவனத்தின் மீளப்பெறல் நடவடிக்கையில் குறிப்பிட்ட சில கொரோலா (Corolla), டன்ட்ரா (Tundra), செகோயா (Sequoia), 4ரன்னர் (4Runner) மற்றும் தெரிவு செய்யப்பட்ட லெக்ஸஸ் ரக வாகனங்களும் உள்ளடங்குகின்றன.

டொயோட்டா நிறுவனத்தின் இந்த மீளப்பெறல் நடவடிக்கை, அமெரிக்காவில் சுமார் 314,000 வாகனங்கள் உட்பட உலகளாவிய ரீதியில் சுமார் 790,000 வாகனங்களைப் பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான மாற்று ஏர்பேக் உதிரிப்பாகங்களை 2027ஆம் ஆண்டின் முதல் பாதிக்குள் வழங்க முடியும் என டொயோட்டா நிறுவனம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (NewsMe)

எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்!
Tags: AmericaCarCorollaCR-VHondaHonda carHonda suvHonda vehicleJappanSUVToyotaToyota carToyota suvToyota vehicleTundra
Previous Post

இலங்கை, தாய்லாந்து நாடுகளுக்கு இடையில் விசா இனி இல்லை l உடன்படிக்கை கைச்சாத்து

Next Post

தேசிய எதிர்ப்பு தினம் இன்று – ஆசிரியர்கள், அதிபர்கள் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானம்

Related Posts

கூச்சலிட்டால் அரசாங்கத்திடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி

கூச்சலிட்டால் அரசாங்கத்திடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி

November 26, 2026

எந்தளவான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், அசாதாரண கோரிக்கைகளுக்கு இந்த சந்தர்ப்பத்தில் தீர்வை வழங்க முடியாது என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவிக்கிறார். கொழும்பில் இன்று (நவ.26) நடைபெற்ற...

குவைட் மீது ட்ரோன் தாக்குதல் l இருவர் உயிரிழப்பு

குவைட் மீது ட்ரோன் தாக்குதல் l இருவர் உயிரிழப்பு

November 26, 2026

குவைட் மீது ஈரான் இன்று (நவ.26) ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் இரண்டு இத்தாலி பிரஜைகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேசஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குவைட்டிலுள்ள ஜேர்மன் நிறுவனத்தில்...

கண்டியிலிருந்து 250 வருடங்களுக்கு முன்னர் ஒல்லாந்தர்கள் கொண்டு சென்ற துப்பாக்கிகள் மீண்டும் இலங்கைக்கு

கண்டியிலிருந்து 250 வருடங்களுக்கு முன்னர் ஒல்லாந்தர்கள் கொண்டு சென்ற துப்பாக்கிகள் மீண்டும் இலங்கைக்கு

November 26, 2026

ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கண்டி இராஜ்ஜியத்திலிருந்து கொண்டு சென்ற இலங்கைக்கே சொந்தமான பாரிய துப்பாக்கி (Rampartguns) என அடையாளப்படுத்தப்பட்ட இரண்டு துப்பாக்கிகளை மீண்டும் இலங்கையிடம் ஒப்படைக்க நெதர்லாந்து...

இலங்கையை அண்மித்து உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் l கடும் எச்சரிக்கை விடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்

இலங்கையை அண்மித்து உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் l கடும் எச்சரிக்கை விடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்

November 26, 2026

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் எதிர்வரும் நவம்பர் 29ஆம் திகதியளவில் வளிமண்டலத்தில் கீழ்மட்ட காற்றழுத்தத் தளம்பல் நிலை ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல்...

ஆசிரியர்கள், அதிபர்களினால் மாணவர்களின் பரீட்சை நடக்காத நிலைமை

ஆசிரியர்கள், அதிபர்களினால் மாணவர்களின் பரீட்சை நடக்காத நிலைமை

November 26, 2026

நாடு முழுவதும் உள்ள அதிபர்கள் - ஆசிரியர்கள் எதிர்வரும் 30ம் திகதி முன்னெடுக்கவுள்ள சுகயீன விடுமுறை தொழில்சங்க நடவடிக்கை காரணமாக பாடசாலைகளில் நடைபெறுகின்ற தவணை பரீட்சைகளுக்கு பாதிப்பு...

இஸ்ரேலில் பாலஸ்தீனர்கள் கடும் சித்திரவதை!

இஸ்ரேலில் பாலஸ்தீனர்கள் கடும் சித்திரவதை!

November 26, 2026

இஸ்ரேலில் கடும் சித்திரவதைக்கு உள்ளாகும் பாலஸ்தீன கைதிகள் குறித்து சர்வதேசத்தின் கவனம் மீண்டும் திரும்பியுள்ளது. சித்திரவதைக்கு எதிரான பொதுக் குழுவின் அறிக்கையின் பிரகாரம் பாலஸ்தீன கைதிகள் கடுமையான...

Next Post
தேசிய எதிர்ப்பு தினம் இன்று – ஆசிரியர்கள், அதிபர்கள் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானம்

தேசிய எதிர்ப்பு தினம் இன்று – ஆசிரியர்கள், அதிபர்கள் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானம்

  • Trending
  • Comments
  • Latest
வீதியையே கண்டிராத கண்டியிலுள்ள தமிழர் பகுதி – எதிர்காலம் கேள்விக்குறியில்

வீதியையே கண்டிராத கண்டியிலுள்ள தமிழர் பகுதி – எதிர்காலம் கேள்விக்குறியில்

November 25, 2026
BREAKING NEWS :- இலங்கைக்கு சுனாமி இல்லை

BREAKING NEWS :- இலங்கைக்கு சுனாமி இல்லை

November 24, 2026
நடிகை பிரியா பவானி சங்கர் திருமண நிச்சயம்?

நடிகை பிரியா பவானி சங்கர் திருமண நிச்சயம்?

November 19, 2026
JUST IN :- கொழும்பிலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் தீ

JUST IN :- கொழும்பிலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் தீ

November 23, 2026
மஹிந்தவின் ஒரு புதல்வர் FCID முன்னிலையில் l மற்றைய புதல்வர் நீதிமன்றில் முன்னிலையில்

மஹிந்தவின் ஒரு புதல்வர் FCID முன்னிலையில் l மற்றைய புதல்வர் நீதிமன்றில் முன்னிலையில்

இலங்கையின் பல பகுதிகளில் கூட்டம் கூட்டமாகப் பறக்கும் மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகள்! என்ன காரணம்?

இலங்கையின் பல பகுதிகளில் கூட்டம் கூட்டமாகப் பறக்கும் மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகள்! என்ன காரணம்?

கொழும்பு மேயருக்கும் வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளருக்கிடையில் கருத்து மோதல்

கொழும்பு மேயருக்கும் வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளருக்கிடையில் கருத்து மோதல்

ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் போக்குவரத்து தடை!

ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் போக்குவரத்து தடை!

கூச்சலிட்டால் அரசாங்கத்திடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி

கூச்சலிட்டால் அரசாங்கத்திடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி

November 26, 2026
குவைட் மீது ட்ரோன் தாக்குதல் l இருவர் உயிரிழப்பு

குவைட் மீது ட்ரோன் தாக்குதல் l இருவர் உயிரிழப்பு

November 26, 2026
கண்டியிலிருந்து 250 வருடங்களுக்கு முன்னர் ஒல்லாந்தர்கள் கொண்டு சென்ற துப்பாக்கிகள் மீண்டும் இலங்கைக்கு

கண்டியிலிருந்து 250 வருடங்களுக்கு முன்னர் ஒல்லாந்தர்கள் கொண்டு சென்ற துப்பாக்கிகள் மீண்டும் இலங்கைக்கு

November 26, 2026
இலங்கையை அண்மித்து உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் l கடும் எச்சரிக்கை விடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்

இலங்கையை அண்மித்து உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் l கடும் எச்சரிக்கை விடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்

November 26, 2026

சமீபத்திய செய்திகள்

இலங்கை மற்றும் உலகின் முக்கிய செய்திகளை விரைவாகவும் நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் உங்கள் நம்பிக்கையான செய்தித் தளம்

Follow Us

செய்திப் பிரிவுகள்

  • BIZ
  • Uncategorized
  • அரசியல் மறுபக்கம்
  • இப்படியும் நடக்கிறது
  • உள்நாடு
  • கட்டுரை
  • நமது சினிமா
  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • விளையாட்டு
  • வெளிநாடு

சமீபத்திய செய்திகள்

கூச்சலிட்டால் அரசாங்கத்திடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி

கூச்சலிட்டால் அரசாங்கத்திடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி

November 26, 2026
குவைட் மீது ட்ரோன் தாக்குதல் l இருவர் உயிரிழப்பு

குவைட் மீது ட்ரோன் தாக்குதல் l இருவர் உயிரிழப்பு

November 26, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரம்
  • தொடர்பு

© 2026 NewsMe.lk. All rights reserved | Site by DIVENZA

Powered by CookieAdmin
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.