இலங்கையில் இன்றைய (நவ.23) காலை நேர நிலவரத்தின் பிரகாரம் தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளதாக செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, கடந்த 21ம் திகதியுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் (நவ.23) 22 கரட் தங்கத்தின் விலை 3,400 ரூபாவினால் அதிகரித்துள்ளதுடன், 24 கரட் தங்கத்தின் விலை 3,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
22 கரட் தங்கத்தின் விலை 317,400 ரூபாவாக காணப்படுவதுடன், 24 கரட் தங்கத்தின் விலை 345,000 ரூபாவாக காணப்படுகின்றது.
கடந்த 17ம் திகதி 329,400 ரூபாவாக காணப்பட்ட 22 கரட் தங்கத்தின் விலை கடந்த 21ம் திகதி வரை தொடர்ச்சியாக வீழ்ச்சி கண்டிருந்தது.
இதன்படி, 22 கரட் தங்கமானது கடந்த 21ம் திகதி 314,700 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.
அதேவேளை, கடந்த 17ம் திகதி 358,000 ரூபாவாக காணப்பட்ட 24 கரட் தங்கத்தின் விலை, கடந்த 21ம் திகதி 314,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே, இன்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.
(NewsMe)




















