வெலிகம – மிதிகம ரயில் கடவையில் பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கு (STF) சொந்தமான கெப் ரக வாகனமொன்று ரயிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று (நவ.23) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. (NewsMe)




















