ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, சீன விஜயத்தின் போது கைச்சாத்திட்ட 4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீடு எங்கே என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் இன்று (நவ.23) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தார்.
”இந்த அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் அதானி என்ற இந்திய முதலீட்டாளரை திருப்பி அனுப்பியது. சைனா மெர்சன்ட் சீன நிறுவனத்தை திருப்பி அனுப்பியது. உங்களின் ஜனாதிபதி சீனாவிற்கு சென்று, சீன ஜனாதிபதியுடன் கைச்சாத்திட்டு நான்கு பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டை கொண்டு வர சென்றார். இவ்வாறு கைச்சாத்திடப்பட்ட முதலீடு தொடர்பில் நான்கு ஊடக சந்திப்புக்களை நடாத்தியதாக நினைவில் இருக்கின்றது. இந்த அடிப்படையில் உண்மையாக வேண்டும். எனினும், நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன?. அந்த முதலீடும் திரும்பி சென்று விட்டதா?”” என நாமல் ராஜபக்ஸ கேள்வி எழுப்பியிருந்தார். (NewsMe)




















