நாட்டில் ஐஸ் போதைப்பொருள் தொடர்பில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாடடுச் சபை தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 406 ஆகும். இவர்களில் 29 ஆயிரத்து 177 பேர் போதைப் பொருள் தொடர்பான குற்றவாளிகளாவர். சிறையில் உள்ள மொத்த ஆண்களில் 28 ஆயிரத்து 885 பேர் போதைப் பொருள் தொடர்பிலானவர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஐஸ் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றவாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த எண்ணிக்கை 37.40 வீதத்தால் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (NewsMe)




















