இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (நவ.25) குறைவடைந்துள்ளது.
செட்டியார் தெருவின் தங்க விற்பனையாளர்களின் தகவலின் பிரகாரம், கடந்த 23ம் திகதியுடன் ஒப்பிடுகையில் 24 கரட் தங்கத்தின் விலை 3000 ரூபாவினால் குறைவடைந்துள்ளது.
அத்துடன், கடந்த 23ம் திகதியுடன் ஒப்பிடுகையில் 22 கரட் தங்கத்தின் விலை 2,496 ரூபாவினால் குறைவடைந்துள்ளது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் விலை இன்று (நவ.25) 342,000 ரூபாவாகும், 22 கரட் தங்கத்தின் விலை 313,504 ரூபாவாகும் விற்பனை செய்யப்படுகின்றது.
(NewsMe)




















