திட்டமிட்டதன் பிரகாரம் எதிர்வரும் 30ம் திகதி சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.
பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் இன்று (நவ.25) இடம்பெற்ற பேச்சுவார்த்தை திருப்தியளிக்காததை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
தமது பிரச்சினகளுக்கு பிரதமருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் அந்த கூட்டமைப்பு குறிப்பிடுகின்றது. (NewsMe)




















