முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது 26 மாத பதவிக் காலத்தில் மேற்கொண்ட 33 வெளிநாட்டு பயணங்களுக்காக 1,010 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது 26 மாத பதவிக் காலத்தில் மேற்கொண்ட 8 வெளிநாட்டு விஜயங்களுக்காக 31.7 மில்லியன் ரூபாவை மாத்திரமே செலவிட்டுள்ளதாகவும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (நவ.21) உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் திகதி பிரித்தானியாவிற்கு மேற்கொண்ட விஜயம் முதல் 2024ம் ஆண்டு ஜுன் மாதம் 8ம் திகதி இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயம் வரை 33 வெளிநாட்டு விஜயங்களை ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டுள்ளதாக தெரிவித்த நலிந்த ஜயதிஸ்ஸ, இந்த விஜயங்களின் போது 421 பேர் அவருடன் சென்றிருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயத்துடன் ஒப்பிடுகையில், அநுர குமார திஸாநாயக்க தனது முதல் 26 மாத பதவி காலத்தில் 8 வெளிநாட்டு விஜயங்களை மாத்திரமே மேற்கொண்டுள்ளதாகவும், அதற்காக 31.7 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்த பயணங்களுக்காக மேலதிக பணங்களை எதையும் கோரவில்லை எனவும் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். (NewsMe)




















