கொழும்பு – கண்டி வீதியின் பஹல கடுகண்ணாவ பகுதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இன்று (நவ. 24) காலை முதல் இந்த வீதி திறக்கப்பட்டதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கிறது.
கொழும்பு – கண்டி வீதியின் பஹல கடுகண்ணாவ பகுதி நேற்று (நவ.23) மூடப்பட்டது.
புனரமைப்பு நடவடிக்கை காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பஹல கடுகண்ணாவ பகுதி நேற்றிரவு (நவ.23) 11 மணி முதல் இன்று (நவ.24) அதிகாலை 6 மணி வரை முழுமையாக மூடப்பட்டிருந்தது.
பஹல கடுகண்ணாவை பகுதியிலுள்ள ஆபத்தான கற்களை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துதல் மற்றும் வீதி புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்திருந்தது. (NewsMe)




















