திட்வா சூறாவளியின் பின்னர், இந்தியாவினால் வழங்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிவாரண உதவித் திட்டத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் வகையிலான விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி பணிக் குழு பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ரயில் மார்க்கங்களை வழமைக்கு கொண்டு வருதல் மற்றும் தற்காலிக, நிரந்தர பாலங்களை அமைக்கும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கை மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் இந்தியா தமது மகிழ்ச்சியை இதன்போது வெளியிட்டுள்ள தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், வீட்டு புனர்நிர்மான உதவித் திட்டம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
முழுமையாக மற்றும் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளை நிர்மாணிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்த கலந்துரையாடலில் கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளன.
Chief of Staff to the President of Sri Lanka Mr. Prabath Chandrakeerthi and Deputy High Commissioner @Maitrey_K reviewed the progress of implementation of projects under the USD 450 mn Rehabilitation and Reconstruction package under Indian Grant Assistance, announced following #CycloneDitwah in 🇱🇰.
During the meeting, both sides noted the swift progress of several projects, including railway restoration and the construction of both temporary and permanent bridges. They also discussed accelerating project for reconstruction of fully or partially damaged houses funded through grant assistance, as well as those for procurement of vehicles and supply of livestock under Lines of Credit.
@MEAIndia
@IndianDiplomacy
@dpa_mea— India in Sri Lanka (@IndiainSL) November 23, 2026
(NewsMe)




















