• எம்மைப்பற்றி
  • விளம்பரம்
  • தொடர்பு
NewsMe Sri Lanka
Advertisement
  • முகப்பு
  • உள்நாடு
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • கட்டுரை
  • அரசியல் மறுபக்கம்
  • இப்படியும் நடக்கிறது
  • நமது சினிமா
  • உங்கள் பங்களிப்பு
  • BIZ
No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாடு
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • கட்டுரை
  • அரசியல் மறுபக்கம்
  • இப்படியும் நடக்கிறது
  • நமது சினிமா
  • உங்கள் பங்களிப்பு
  • BIZ
No Result
View All Result
NewsMe Sri Lanka
No Result
View All Result
Home முக்கிய செய்திகள்

அரச ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பளம் ஜனவரியில் உயர்கிறது – பிரதமர் தெரிவிப்பு

by Ranjan Arun Prasadh
November 22, 2026
in முக்கிய செய்திகள், உள்நாடு
அரச ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பளம் ஜனவரியில் உயர்கிறது – பிரதமர் தெரிவிப்பு
292
VIEWS
Share on FacebookShare on Twitter

அனைத்து அரச ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மூன்றாவது சம்பள உயர்வு அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் வழங்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற வரப்பிரசாதங்களுக்குள் மறைந்து, எதிர்க்கட்சி தனிப்பட்ட முறையில் பொய்யான தகவல்களைச் சமூகத்தில் பரப்புவது குறித்துத் தாம் கவலையடைவதாகவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

விசேட செலவின அலகுகளுக்கான 2027ஆம் ஆண்டு வரவு–செலவுத் திட்டக் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு, பாராளுமன்றத்தில் இன்று (நவ. 21) உரையாற்றும்போதே பிரதமர் இதனைக் கூறினார்.

அரச ஊழியர் சம்பளம், ஜனாதிபதி நிதியத்தின் முன்னேற்றம், கல்வி நலன்புரி, சுயாதீன ஆணைக்குழுக்கள் உள்ளிட்ட பல துறைகள் குறித்துப் பிரதமர் இதன்போது தெளிவுபடுத்தினார்.

அடிப்படைச் சம்பளத்தை மூன்று கட்டங்களாக உயர்த்தும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ், 2025ஆம் மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் முதலாவது, இரண்டாவது கட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்ட பிரதமர், அனைத்து அரச ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மூன்றாவது சம்பள உயர்வு 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

அத்துடன், நிலவும் சம்பள, ஓய்வூதிய முரண்பாடுகளைத் தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவின் அறிக்கை 2027ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கிடைக்கப்பெறவுள்ளதாகவும், அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் அம்முரண்பாடுகளைச் சீர்செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளைப் பிரதேச செயலக மட்டம் வரை இணையவழி (Online) முறைமையூடாகப் பரவலாக்கியதன் காரணமாக, 2025ஆம் ஆண்டில் 1,664 ஆகக் காணப்பட்ட பயனாளிகளின் எண்ணிக்கை 2026ஆம் ஆண்டளவில் 27,948 ஆக அதிகரித்துள்ளதாகவும், வெளிப்படைத்தன்மை மிக்க நிர்வாகத்தின் காரணமாகக் கடந்த இரண்டு வருடங்களில் நிதியத்தின் நிதி வலுவு 150 சதவீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு மேலதிகமாக, பல்கலைக்கழக மாணவர்களுக்குச் சுமார் 2,000 மூக்குக்கண்ணாடிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதோடு, அரச வைத்தியசாலைகளில் கண்புரைச் சத்திரசிகிச்சைக்கான காத்திருப்புப் பட்டியலைக் குறைக்கும் நோக்கில், ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் 570 பேருக்கும் நுவரெலியா மாவட்டப் பொது வைத்தியசாலையில் 600 பேருக்கும் தேவையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு 100 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, பாடசாலை மாணவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் சுரக்ஷா காப்புறுதித் திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு, அதன் பயன்களும் உள்ளடக்கப்படும் நோய் நிலைமைகளும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தில் கல்வி தொடர்பான டிஜிட்டல் செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டு, செயலூக்கத்துடன் இயங்கி வருவதாகவும், பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கான முறையான தொடர் நடவடிக்கை (Follow-up) செயன்முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

பாடசாலைச் சமூகம் மற்றும் ஏனைய அமைச்சுகளை ஒன்றிணைத்து ‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகத் தெரிவித்த பிரதமர், ஜனாதிபதி அலுவலகத்தில் வீண்விரயத்தையும் ஊழலையும் குறைத்துச் சேவைத் தரத்தை உயர்த்துவதற்கும், சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வதற்கும், மதத் தலைவர்களுடனான கலந்துரையாடல்கள் மூலம் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

17ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்குத் தகுதியான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தேசியப் பொலிஸ் ஆணைக்குழுவின் முறைப்பாடுகள் மீதான விசாரணை வீதம் ஆண்டுதோறும் அதிகரித்துள்ளதாகவும், மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அரச சேவை ஆணைக்குழுவும் கொள்கை வகுப்பதிலும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும் செயலூக்கத்துடன் பங்களிப்புச் செய்வதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியின் ஆக்கபூர்வமான, கௌரவமான விமர்சனங்களை அரசாங்கம் எப்போதும் ஏற்றுக்கொள்ளும் போதிலும், பாராளுமன்ற வரப்பிரசாதங்களுக்குள் மறைந்து, தனிப்பட்ட முறையில் பொய்யான தகவல்களைச் சமூகத்தில் பரப்புவது கவலைக்குரியது எனப் பிரதமர் வலியுறுத்தினார்.

நாடு மாற்றத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கும் இத்தகைய தருணத்தில், எதிர்க்கட்சி நாகரிகமாகவும் பொறுப்புணர்வுடனும் செயற்படும் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

  (NewsMe)

எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்!
Tags: GovernmentGovernment servantHarini amarasuriyaLkLkaparliamentPmPrime ministersri lankasri lanka parliamentTeachersTeachers salary
Previous Post

இந்து சமுத்திரத்தில் நிலநடுக்கம் l இலங்கைக்கு பாதிப்பா?

Next Post

யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையில் மோதல் l 21 மாணவர்கள் விளக்கமறியலில்

Related Posts

கூச்சலிட்டால் அரசாங்கத்திடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி

கூச்சலிட்டால் அரசாங்கத்திடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி

November 26, 2026

எந்தளவான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், அசாதாரண கோரிக்கைகளுக்கு இந்த சந்தர்ப்பத்தில் தீர்வை வழங்க முடியாது என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவிக்கிறார். கொழும்பில் இன்று (நவ.26) நடைபெற்ற...

கண்டியிலிருந்து 250 வருடங்களுக்கு முன்னர் ஒல்லாந்தர்கள் கொண்டு சென்ற துப்பாக்கிகள் மீண்டும் இலங்கைக்கு

கண்டியிலிருந்து 250 வருடங்களுக்கு முன்னர் ஒல்லாந்தர்கள் கொண்டு சென்ற துப்பாக்கிகள் மீண்டும் இலங்கைக்கு

November 26, 2026

ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கண்டி இராஜ்ஜியத்திலிருந்து கொண்டு சென்ற இலங்கைக்கே சொந்தமான பாரிய துப்பாக்கி (Rampartguns) என அடையாளப்படுத்தப்பட்ட இரண்டு துப்பாக்கிகளை மீண்டும் இலங்கையிடம் ஒப்படைக்க நெதர்லாந்து...

இலங்கையை அண்மித்து உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் l கடும் எச்சரிக்கை விடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்

இலங்கையை அண்மித்து உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் l கடும் எச்சரிக்கை விடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்

November 26, 2026

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் எதிர்வரும் நவம்பர் 29ஆம் திகதியளவில் வளிமண்டலத்தில் கீழ்மட்ட காற்றழுத்தத் தளம்பல் நிலை ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல்...

ஆசிரியர்கள், அதிபர்களினால் மாணவர்களின் பரீட்சை நடக்காத நிலைமை

ஆசிரியர்கள், அதிபர்களினால் மாணவர்களின் பரீட்சை நடக்காத நிலைமை

November 26, 2026

நாடு முழுவதும் உள்ள அதிபர்கள் - ஆசிரியர்கள் எதிர்வரும் 30ம் திகதி முன்னெடுக்கவுள்ள சுகயீன விடுமுறை தொழில்சங்க நடவடிக்கை காரணமாக பாடசாலைகளில் நடைபெறுகின்ற தவணை பரீட்சைகளுக்கு பாதிப்பு...

இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் வீழ்ச்சியடையும் பாரம்பரிய தொழில்கள் – முழு விபரம் இணைப்பு

இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் வீழ்ச்சியடையும் பாரம்பரிய தொழில்கள் – முழு விபரம் இணைப்பு

November 26, 2026

இலங்கை ஏற்றுமதி வருமானத்தில் வளர்ச்சியை கண்டுள்ள போதிலும், இலங்கையின் பாரம்பரிய ஏற்றுமதி பொருட்களின் ஊடான வருமானத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. இலங்கை ஏற்றுமதி சபையினால் வெளியிடப்பட்ட கடந்த...

”நாமல் அண்ணன், இருந்ததை விடவும் முதிர்ச்சி பெற்று வருவார்”

”நாமல் அண்ணன், இருந்ததை விடவும் முதிர்ச்சி பெற்று வருவார்”

November 26, 2026

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ இருந்ததை விடவும், முதிர்ச்சியடைந்து சிறையிலிருந்து வெளியில் வருவார் என அவரது சகோதரர் ரோஹித்த ராஜபக்ஸ...

Next Post
யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையில் மோதல் l 21 மாணவர்கள் விளக்கமறியலில்

யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையில் மோதல் l 21 மாணவர்கள் விளக்கமறியலில்

  • Trending
  • Comments
  • Latest
வீதியையே கண்டிராத கண்டியிலுள்ள தமிழர் பகுதி – எதிர்காலம் கேள்விக்குறியில்

வீதியையே கண்டிராத கண்டியிலுள்ள தமிழர் பகுதி – எதிர்காலம் கேள்விக்குறியில்

November 25, 2026
BREAKING NEWS :- இலங்கைக்கு சுனாமி இல்லை

BREAKING NEWS :- இலங்கைக்கு சுனாமி இல்லை

November 24, 2026
நடிகை பிரியா பவானி சங்கர் திருமண நிச்சயம்?

நடிகை பிரியா பவானி சங்கர் திருமண நிச்சயம்?

November 19, 2026
JUST IN :- கொழும்பிலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் தீ

JUST IN :- கொழும்பிலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் தீ

November 23, 2026
மஹிந்தவின் ஒரு புதல்வர் FCID முன்னிலையில் l மற்றைய புதல்வர் நீதிமன்றில் முன்னிலையில்

மஹிந்தவின் ஒரு புதல்வர் FCID முன்னிலையில் l மற்றைய புதல்வர் நீதிமன்றில் முன்னிலையில்

இலங்கையின் பல பகுதிகளில் கூட்டம் கூட்டமாகப் பறக்கும் மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகள்! என்ன காரணம்?

இலங்கையின் பல பகுதிகளில் கூட்டம் கூட்டமாகப் பறக்கும் மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகள்! என்ன காரணம்?

கொழும்பு மேயருக்கும் வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளருக்கிடையில் கருத்து மோதல்

கொழும்பு மேயருக்கும் வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளருக்கிடையில் கருத்து மோதல்

ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் போக்குவரத்து தடை!

ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் போக்குவரத்து தடை!

கூச்சலிட்டால் அரசாங்கத்திடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி

கூச்சலிட்டால் அரசாங்கத்திடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி

November 26, 2026
குவைட் மீது ட்ரோன் தாக்குதல் l இருவர் உயிரிழப்பு

குவைட் மீது ட்ரோன் தாக்குதல் l இருவர் உயிரிழப்பு

November 26, 2026
கண்டியிலிருந்து 250 வருடங்களுக்கு முன்னர் ஒல்லாந்தர்கள் கொண்டு சென்ற துப்பாக்கிகள் மீண்டும் இலங்கைக்கு

கண்டியிலிருந்து 250 வருடங்களுக்கு முன்னர் ஒல்லாந்தர்கள் கொண்டு சென்ற துப்பாக்கிகள் மீண்டும் இலங்கைக்கு

November 26, 2026
இலங்கையை அண்மித்து உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் l கடும் எச்சரிக்கை விடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்

இலங்கையை அண்மித்து உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் l கடும் எச்சரிக்கை விடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்

November 26, 2026

சமீபத்திய செய்திகள்

இலங்கை மற்றும் உலகின் முக்கிய செய்திகளை விரைவாகவும் நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் உங்கள் நம்பிக்கையான செய்தித் தளம்

Follow Us

செய்திப் பிரிவுகள்

  • BIZ
  • Uncategorized
  • அரசியல் மறுபக்கம்
  • இப்படியும் நடக்கிறது
  • உள்நாடு
  • கட்டுரை
  • நமது சினிமா
  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • விளையாட்டு
  • வெளிநாடு

சமீபத்திய செய்திகள்

கூச்சலிட்டால் அரசாங்கத்திடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி

கூச்சலிட்டால் அரசாங்கத்திடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி

November 26, 2026
குவைட் மீது ட்ரோன் தாக்குதல் l இருவர் உயிரிழப்பு

குவைட் மீது ட்ரோன் தாக்குதல் l இருவர் உயிரிழப்பு

November 26, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரம்
  • தொடர்பு

© 2026 NewsMe.lk. All rights reserved | Site by DIVENZA

Powered by CookieAdmin
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.