மோட்டார் வாகன திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்ளத்தின் மீது சைபர் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இந்த சைபர் தாக்குதல் நேற்றிரவு (நவ.21) நடாத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன திணைக்களம் தெரிவிக்கி;ன்றது.
எவ்வாறாயினும், இந்த சைபர் தாக்குதல் காரணமாக மோட்டார் வாகன திணைக்களத்தின் நாராஹேன்பிட்டி அலுவலகத்தின் நடவடிக்கைகளுக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது எனவும் திணைக்களம் குறிப்பிடுகின்றது.
எனினும், நாராஹேன்பிட்டி அலுவலகத்தின் வருவோர், தமக்கான நேரத்தை ஒதுக்கிக் கொண்டு, வருகைத் தருமாறும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த சைபர் தாக்குதல் காரணமாக மோட்டார் வாகன திணைக்களத்தின் இணைய கட்டமைப்பு பாதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள திணைக்களம், appointment.dmt.gov.lk என்ற இணையத்தளத்தில் பிரவேசித்து தமக்கான நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. (NewsMe)




















