கொழும்பு – வோர்ட் பிளேஸ் பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றில் தீ பரவியுள்ளது.
இந்த தீ இன்று (நவ.23) மாலை பரவியதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது.
தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு குறிப்பிடுகின்றது.
இந்த தீ பரவலினால் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களின் நிலைமை தொடர்பிலான தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை.
தீ பரவிய கட்டிடத் தொகுதியில் சிக்குண்டிருந்த மூன்று வெளிநாட்டு பிரஜைகளும் காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தீ பரவியமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்பதுடன், சேதவிபரங்களும் இதுவரை தெரியவரவில்லை.
தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளை கொழும்பு தீயணைப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். (NewsMe)



















