இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவிடம் முதல் டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் டொம் லாதம் ஆட்டமிழந்தார். இருப்பினும்இ இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவை எதிர்கொள்ள தனது துடுப்பாட்ட உத்தியில் பெரிய மாற்றம் எதையும் செய்யப்போவதில்லை என்று நியூஸிலாந்து அணித் தலைவர் டொம் லாதம் தெரிவித்துள்ளார்.
இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்தில் இன்று அதிகாலை தொடங்கியது. முன்னதாக நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நியூஸிலாந்து அணித் தலைவர் லாதம் கூறியதாவது:
ஜஸ்பிரீத் பும்ரா புதிய பந்தில் வீசினாலும்இ பழைய பந்தில் வீசினாலும் துடுப்பாட்ட வீரர்களுக்கு சவாலானவர்தான். அவரது பந்துவீச்சு முறை தனித்துவமானது. மற்ற பந்துவீச்சாளர்களைவிட துடுப்பாட்ட வீரர்களுக்கு சற்று நெருக்கமாக பந்தை வீசுகிறார். என்னைப் பொறுத்தவரைஇ என்னை அதிகம் அச்சுறுத்தக்கூடிய பந்தை எதிர்கொள்ளும் வகையில் நான் தயாராக இருப்பதுதான் முக்கியம்.
ஒவ்வொரு வீரருக்கும் பந்துவீச்சை எதிர்கொள்ளும் முறை வேறுபடலாம். கவனம் முழுவதையும் ஆட்டத்தில் செலுத்திஇ பந்தை உன்னிப்பாகக் கவனித்து எந்தப் பக்கம் ஸ்விங் ஆகிறது என்பதைப் பொறுத்து விளையாட வேண்டும். மோசமான ஆட்டத்துக்குப் பிறகு பேட்டிங்கில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்று நினைப்பதே சில நேரங்களில் கவனச்சிதறலை ஏற்படுத்திவிடும். இதுவரை என்னை இந்த நிலைக்கு அழைத்து வந்தது தெளிவான சிந்தனையும்இ எனது ஆட்டத்தின் மீதான நம்பிக்கையும்தான் என்றார். (NewsMe)


















