• எம்மைப்பற்றி
  • விளம்பரம்
  • தொடர்பு
NewsMe Sri Lanka
Advertisement
  • முகப்பு
  • உள்நாடு
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • கட்டுரை
  • அரசியல் மறுபக்கம்
  • இப்படியும் நடக்கிறது
  • நமது சினிமா
  • உங்கள் பங்களிப்பு
  • BIZ
No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாடு
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • கட்டுரை
  • அரசியல் மறுபக்கம்
  • இப்படியும் நடக்கிறது
  • நமது சினிமா
  • உங்கள் பங்களிப்பு
  • BIZ
No Result
View All Result
NewsMe Sri Lanka
No Result
View All Result
Home விளையாட்டு

இந்தியாவையும் வெளியேற்றி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை கிரிக்கெட் அணி

by Ranjan Arun Prasadh
November 27, 2026
in விளையாட்டு
இந்தியாவையும் வெளியேற்றி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை கிரிக்கெட் அணி
286
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆசிய வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய ‘A’ அணியை 8 விக்கெட்டுகளால் வீழ்த்திய, பவன் ரத்நாயக்க தலைமையிலான இலங்கை ‘A’ அணி, தோல்வியின்றி தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

கத்தாரின் தோஹாவில் உள்ள West End Park சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நேற்று (நவ.26) நடைபெற்ற இந்த போட்டியில், இந்திய அணி நிர்ணயித்த 318 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை இலங்கை அணி 41.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து எட்டியது.

இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான லசித் குரூஸ்புள்ளே மற்றும் சினெத் ஜயவர்தன ஆகியோர் முதலாவது விக்கெட்டுக்காக 174 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறப்பான ஆரம்பத்தை வழங்கினர்.

இந்தியப் பந்துவீச்சாளர்களுக்கு பெரும் சவாலாக விளங்கிய சினெத் ஜயவர்தன, 70 பந்துகளில் 10 நான்கு ஓட்டங்கள் மற்றும் 6 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக அதிரடியாக 105 ஓட்டங்களைக் குவித்தார்.

சினெத்தின் ஆட்டமிழப்பைத் தொடர்ந்து, லசித் குரூஸ்புள்ளே அணியின் பொறுப்பை ஏற்று, இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையை 35ஆவது ஓவரில் 265 ஆக உயர்த்தினார்.

12 நான்கு ஓட்டங்கள் மற்றும் 3 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 116 ஓட்டங்களைப் பெற்ற லசித் குரூஸ்புள்ளே ஆட்டமிழந்ததுடன், அதுவே இலங்கை அணியின் இறுதி விக்கெட்டாகவும் அமைந்தது.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய அணித் தலைவர் பவன் ரத்நாயக்க மற்றும் நிஷான் மதுஷ்க ஆகியோர் ஆட்டமிழக்காமல் இருந்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினர்.

நிஷான் மதுஷ்க ஆட்டமிழக்காமல் 58 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், அணித் தலைவர் பவன் ரத்நாயக்க 16 பந்துகளில் அதிரடியாக 31 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணியின் வெற்றியை விரைவுபடுத்தினார்.

முதற்கட்டப் போட்டிகளில் பாகிஸ்தான் அணியிடமும் தோல்வியடைந்த இந்திய ‘A’ அணி, இந்தத் தோல்வியுடன் தொடரிலிருந்து வெளியேறியது.

அதேவேளை, தொடரில் இதுவரை நடைபெற்ற அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்ற இலங்கை ‘A’ அணி, இறுதிப் போட்டிக்குத் தோல்வியின்றித் தகுதி பெற்றுள்ளது. (NewsMe)

எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்!
Tags: CricketindiaIndia cricket teamQatarsri lankaSri Lanka cricketSri lanka cricket teamஇந்திய கிரிக்கெட் அணிஇந்தியாஇலங்கை கிரிக்கெட் அணிகிரிக்கெட்ஸ்ரீலங்கா கிரிக்கெட்
Previous Post

“துடுப்பாட்ட உத்தியில் மாற்றமில்லை”

Next Post

கொங்கோவை ஆட்டிப் படைக்கும் எபோலா

Related Posts

“துடுப்பாட்ட உத்தியில் மாற்றமில்லை”

“துடுப்பாட்ட உத்தியில் மாற்றமில்லை”

November 27, 2026

இந்​திய வேகப்​பந்து வீச்​சாளர் ஜஸ்பிரீத் பும்​ராவிடம் முதல் டெஸ்ட் போட்​டி​யின் இரு இன்​னிங்ஸ்களி​லும் டொம் லாதம் ஆட்​ட​மிழந்​தார். இருப்​பினும்இ இரண்டாவது டெஸ்ட் போட்​டி​யில் பும்​ராவை எதிர்​கொள்ள தனது...

இலங்கையை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்

இலங்கையை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்

November 20, 2026

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில்...

நிச்சயதார்த்த விழாவில் கிரிக்கெட் வீரருக்கு நேர்ந்த சோகம்

நிச்சயதார்த்த விழாவில் கிரிக்கெட் வீரருக்கு நேர்ந்த சோகம்

November 11, 2026

அவுஸ்திரேலியா கிரிக்கெட் வீரரான லான்ஸ் மோரிஸ் (வயது 28), கடந்த சனிக்கிழமை தனது பெற்றோரின் வீட்டில் நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்றிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வழுக்கி...

முதல் நாளில் பாகிஸ்தான் 281 ஓட்டங்கள் – 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது இலங்கை!

முதல் நாளில் பாகிஸ்தான் 281 ஓட்டங்கள் – 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது இலங்கை!

November 10, 2026

இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 5...

Next Post
கொங்கோவை ஆட்டிப் படைக்கும் எபோலா

கொங்கோவை ஆட்டிப் படைக்கும் எபோலா

  • Trending
  • Comments
  • Latest
வீதியையே கண்டிராத கண்டியிலுள்ள தமிழர் பகுதி – எதிர்காலம் கேள்விக்குறியில்

வீதியையே கண்டிராத கண்டியிலுள்ள தமிழர் பகுதி – எதிர்காலம் கேள்விக்குறியில்

November 25, 2026
BREAKING NEWS :- இலங்கைக்கு சுனாமி இல்லை

BREAKING NEWS :- இலங்கைக்கு சுனாமி இல்லை

November 24, 2026
நடிகை பிரியா பவானி சங்கர் திருமண நிச்சயம்?

நடிகை பிரியா பவானி சங்கர் திருமண நிச்சயம்?

November 19, 2026
இலங்கையை அண்மித்து உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் l கடும் எச்சரிக்கை விடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்

இலங்கையை அண்மித்து உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் l கடும் எச்சரிக்கை விடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்

November 26, 2026
மஹிந்தவின் ஒரு புதல்வர் FCID முன்னிலையில் l மற்றைய புதல்வர் நீதிமன்றில் முன்னிலையில்

மஹிந்தவின் ஒரு புதல்வர் FCID முன்னிலையில் l மற்றைய புதல்வர் நீதிமன்றில் முன்னிலையில்

இலங்கையின் பல பகுதிகளில் கூட்டம் கூட்டமாகப் பறக்கும் மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகள்! என்ன காரணம்?

இலங்கையின் பல பகுதிகளில் கூட்டம் கூட்டமாகப் பறக்கும் மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகள்! என்ன காரணம்?

கொழும்பு மேயருக்கும் வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளருக்கிடையில் கருத்து மோதல்

கொழும்பு மேயருக்கும் வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளருக்கிடையில் கருத்து மோதல்

ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் போக்குவரத்து தடை!

ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் போக்குவரத்து தடை!

இலங்கையை விட்டு வெளியேற்றிய ஐந்து சீன பிரஜைகள்

இலங்கையை விட்டு வெளியேற்றிய ஐந்து சீன பிரஜைகள்

November 27, 2026
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

November 27, 2026
பொலிஸ் நிலையங்களுக்குள் தொலைபேசியை கொண்டு செல்ல முடியுமா? – அமைச்சர் வழங்கிய பதில்

பொலிஸ் நிலையங்களுக்குள் தொலைபேசியை கொண்டு செல்ல முடியுமா? – அமைச்சர் வழங்கிய பதில்

November 27, 2026
கண்டியில் இந்திய கல்விக் கண்காட்சி – மாணவர்களுக்கு இந்தியாவில் கல்வி கற்க அரிய சந்தர்ப்பம்

கண்டியில் இந்திய கல்விக் கண்காட்சி – மாணவர்களுக்கு இந்தியாவில் கல்வி கற்க அரிய சந்தர்ப்பம்

November 27, 2026

சமீபத்திய செய்திகள்

இலங்கை மற்றும் உலகின் முக்கிய செய்திகளை விரைவாகவும் நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் உங்கள் நம்பிக்கையான செய்தித் தளம்

Follow Us

செய்திப் பிரிவுகள்

  • BIZ
  • Uncategorized
  • அரசியல் மறுபக்கம்
  • இப்படியும் நடக்கிறது
  • உள்நாடு
  • கட்டுரை
  • நமது சினிமா
  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • விளையாட்டு
  • வெளிநாடு

சமீபத்திய செய்திகள்

இலங்கையை விட்டு வெளியேற்றிய ஐந்து சீன பிரஜைகள்

இலங்கையை விட்டு வெளியேற்றிய ஐந்து சீன பிரஜைகள்

November 27, 2026
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

November 27, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரம்
  • தொடர்பு

© 2026 NewsMe.lk. All rights reserved | Site by DIVENZA

Powered by CookieAdmin
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.