கொங்கோ குடியரசில் வேகமாகப் பரவி வரும் எபோலா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 12,000 ஐ கடந்துள்ளது.
வரலாற்றிலேயே மிக வேகமாகப் பரவும் எபோலா தொற்றாக இது மாறியுள்ள நிலையில், இதுவரை உறுதி செய்யப்பட்ட 12,021 நோயாளிகளில் ஏறத்தாழ 5,904 போ் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொங்கோவில் கடந்த மே முதல் பரவி வரும் அரிதான எபோலா தொற்றுக்கு அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையோ அல்லது தடுப்பூசியோ எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையேஇ வடகிழக்கு இடுரி மாகாணத்தில் இராணுவத்துக்கும் கிளா்ச்சியாளா்களுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இத்தகைய வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மருத்துவக் குழுக்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதோடுஇ நோய் கண்காணிப்புப் பணிகள் முடங்கியுள்ளன. (NewsMe)




















