2026ம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 04ம் திகதி நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2027ம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 04ம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவவின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2026ம் ஆண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 04ம் திகதியுடன் நிறைவடைகின்றது.
2026ம் ஆண்டுக்கான கல்வி தவணை நிறைவு பெறும் வரை, திட்டமிட்ட அனைத்து கல்வி நடவடிக்கைகளும், பரீட்சைகளும் உரிய வகையில் அட்டவணைகளுக்கு அமைய நடாத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. (NewsMe)



















