இஸ்ரேலில் கடும் சித்திரவதைக்கு உள்ளாகும் பாலஸ்தீன கைதிகள் குறித்து சர்வதேசத்தின் கவனம் மீண்டும் திரும்பியுள்ளது.
சித்திரவதைக்கு எதிரான பொதுக் குழுவின் அறிக்கையின் பிரகாரம் பாலஸ்தீன கைதிகள் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதுகாப்புப் பிரிவினரின் விசாரணைக்கு முன்னதாக கைதிகள் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாகவும் இஸ்ரேல் அரசாங்கம் வேண்டுமென்றே இதனை நடைமுறைப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீன கைதிகளுக்கு மரண தண்டனை வழங்கும் நோக்கில் இஸ்ரேல் செயற்பட்டு வருவதால் இந்த நிலைமை மேலும் மோசமாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலஸ்தீன கைதிகளால் வழங்கப்பட்ட 42 வாக்குமூலங்களை சித்திரவதைக்கு எதிரான பொதுக்குழு ஆய்வு செய்தது. அதனடிப்படையில் அவர்களில் நான்கில் மூன்று வீதமானோர் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. (NewsMe)




















