பொலிஸ் நிலையங்களுக்குள் கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு செல்ல முடியாது என சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்து முற்றிலும் போலியானது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிக்கின்றார்.
பாராளுமன்றத்தில் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
எந்தவொரு நபருக்கும் பொலிஸ் நிலையங்களுக்குள் தமது கையடக்கத் தொலைபேசியை கொண்டு செல்வதற்கு எந்தவித தடையும் கிடையாது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், சிறை கூடங்களிலுள்ள சந்தேகநபர்களுக்கு கையடக்கத் தொலைபேசிகளை வழங்கி, உரையாட சந்தர்ப்பம் வழங்குவதற்கு சில கட்டுப்பாடுகள் இருக்கக்கூடும் எனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
”எந்தவொரு நபருக்கும் பொலிஸ் நிலையங்களுக்குள் தமது கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு செல்ல முடியும். எந்தவித தடையும் இல்லை. கையடக்கத் தொலைபேசியை எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையங்களுக்குள் செல்லும் இயலுமை அனைவருக்கும் உள்ளது. அவ்வாறான சுற்று நிரூபம் வெளியிடப்படவில்லை. ஒரு விடயம் உள்ளது. சிறை கூடங்களிலுள்ள தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு உரையாடுவதற்கு தொலைபேசிகளை வழங்குவதற்கு சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. எனினும், பொலிஸ் நிலையங்களுக்குள் கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு செல்வதற்கு சாதாரண பொதுமக்களுக்கு எந்தவித தடையும் இல்லை.” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். (NewsMe)



















