இந்தோனேஷியாவின் மேற்கு ஜவாவிலுள்ள தொழிற்சாலையொன்றில் பரவிய தீயினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36ஆக அதிகரித்துள்ளது.
இந்த தீ விபத்தினால் மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ விபத்தின் போது காப்பாற்றப்பட்ட 15 பேரில் நால்வர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், இந்த தொழிற்சாலையில் தீ பரவிய சந்தர்ப்பத்தில் சுமார் 60 பேர் வரை பணியாற்றியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தொழிற்சாலைக்குள் சிக்குண்டுள்ளவர்களை மீட்கும் நோக்கில் தொடர்ச்சியாக தீயணைப்பு படையினர் தேடுதல்களை மேற்கொண்டு வருவதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ விபத்தினால் காணாமல் போயுள்ள தமது உறவினர்களை தேடும் நோக்கில், அவர்களின் உறவினர்கள் தொழிற்சாலையை அண்மித்த பகுதிகளில் ஒன்று திரட்டுள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இந்தோனேஷியாவின் மிகப் பெரிய உணவு மற்றும் உணவு சார்ந்த உற்பத்தி பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலையொன்றே இவ்வாறு தீயினால் முழுமையாக சேதமடைந்துள்ளது. (NewsMe)




















